வைரமுத்து இனி நிம்மதியாக தூங்க முடியாது - ஹெச். ராஜா.!
#metoo என்ற பரப்புரையின் வாயிலாக உலகம் முழுவதும் பெண்கள் தங்க ளுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள், சீண்டல்கள், அத்துமீறல்கள் உள்ளிட்ட வற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதன் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை பொதுச் சமூகத்தினிடம் கொண்டுசேர்ப்பதுடன், இனி அவ்வாறான செயற்பாடுகளை குறைப்பதே இந்த பரப்புரையின் நோக்கமாகும்.
தமிழகத்திலும் பாடலாசிரியர் வைரமுத்து மீது அதிரடியாக பாலி யல் குற்றச்சாட்டினை முன் வைத் துள்ளார் பாடகி சின்மயி. சுமார் 14 வருடங்களுக்கு முன்னர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாகவும், தம்மை போன்று இன்னும் பல பெண்கள் அவரால் பாதிக்கப்பட் டுள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
மேலும், வைரமுத்து மீது வழக்கு தொடர தாம் தயாராகி வருவதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தமிழக சினிமா அரங்கில் பர பரப்பினை உண்டாக்கிய நிலையில், இன்னும் பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகள் மற்றும் சீண்டல்கள் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தியுள்ளனா்.
இந்நிலையில், வைரமுத்து - சின்மயி விவகாரம் குறித்து கருத்து தெரிவித் துள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, "சின்மயி விவகாரம் குறித்து வைரமுத்து மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என் தாய் ஆண்டாளை பழித்த வைரமுத்து வாழ்நாள் முழுவதும் நிம்மதியாக தூங்க முடியாது" என தெரிவித்துள்ளார்.