Breaking News

ஆவலுடன் எதிர்பார்த்த வடமாகாணக் கீதம் உங்களுக்காக..!

வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நாளாகிய இன்றைய தினம் வட மாகாணத்துக்குரிய மாகாணக் கீதம் ஒலிக்கவிடப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபை ஆட்சி நிலவியபோதும் இறுதி அமர்வு நாளான இன்றைய தினம் தான் சபைக்குரிய கீதம் இசைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. . 

பல்லவி 

வட மாகாணம் எங்கள் வளர் தாயகம்!-
இங்கு வாழும் எமக்கு அது அறிவாலயம்!....
அநு பல்லவி திடங்கொண்டு உழைப்போர்கள் திகழும் இடம்! -
இலங்கைத் திரு நாட்டின் தலையாகத் துலங்கும் இடம்!....

சரணங்கள் 

 மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணமும்
- கிளிநொச்சியுடன் வவுனியா மாவட்டங்களும்
எந்நாளும் வளஞ்சேர்க்குமெங்கள் பூமி! -
என்றும் எழிலார் ‘வட மாகாணம்’ என்னும் பூமி!....
(வட மாகாணம் எங்கள் வளர் தாயகம்) 

நில வளமும் கடல் வளமும் நிறைந்த இடம்!...
அன்பு நெறி காக்கும் ஆலயங்கள் அமைந்த இடம்!...
வலம் கொண்ட மறவர்கள் வாழும் இடம்! -
நல்ல வாவலரும் நாவலரும் வாழும் இடம்!

ஒற்றுமையாய் வாழ உறுதிகொள்வோம்! -
நல் ஒழுக்கம் பண்பாடுகளால் உயர்ந்து நிற்போம்!
பற்றோடு உழைத்து நாம் வெற்றி காணுவோம்! -
இந்த பாரில் தலை நிமிர்ந்து முன் செல்லுவோம்
 (வட மாகாணம் எங்கள் வளர் தாயகம்)