அரசியல் கைதிகளின் விடுதலைக்காக சத்தியாக்கிரக போராட்டம்.!
வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இவ் அடை யாள சத்தியாக்கிரகப் போராட்டமானது மாலை 5 மணிவரை நீடிக்கப்படவுள் ளது.
அரசியல் கைதிகள் உண்ணா விரத மிருப்பதும், உறுதிமொழிகள் வழங் கப்படுவதும் பின்பு எந்த நடவடிக்கை களுமின்றி தொடர் கதையாகவே உள் ளது. அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணா விரதத்தை ஆரம்பித்துள் ளார்கள்.
விரைவில் நடவடிக்கை எடுப்போம் என பிரதமர் அறிவிப்பதும், தமிழ்த் தல மைகள் அரசியல் கைதிகளை சென்று பார்வையிட்டு ஆவன செய்வதாக கூறுவதும், நாங்கள் ஜனாதிபதியுடன் கதை த்து விட்டோம் எல்லாம் சரிவரும் என்று கூறுவதும் மீண்டும் கடந்த தினங்க ளில் மேடையேற்றப்பட்டுள்ளது.
இளைஞர்களாக கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வாழ்வின் அரைவாசிக் காலத்தை சிறைகளில் கழித்து இன்று முதியவர்களாகி விட்டார்கள். இன் றைய நல்லாட்சி அரசு இந்த 137 அரசியல் கைதிகளை விடுதலை செய்யாம லும், விசாரணைகளின்றியும் வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீற லாகும்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வவுனியாவில் அடை யாள சத்தியாக்கிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. “விடு தலை செய் விடுதலை செய் அரசியல் கைதிகனை விடுதலை செய், உண்ணா விரதமிருப்போரின் கோரிக்கையை உடனே நிறைவேற்று,
அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கு, ரத்துச் செய் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்துச் செய், நல்லாட்சி அரசே அரசியல் கைதிகளும் மனிதர் களே, புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களை மீண்டும் கைது செய்யாதே என வாச கங்களை தாங்கிய பதாதைகளும் கட்டவிடப்பட்டுள்ளன.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஜனநாயக போராளிகள் கட்சி, சிறீ ரெலோ, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, மாக்லேனிச கட்சி, ஈழவர் ஜனநாயக முன்னணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், அரசியல் கைதியின் உறவினர், பொதுமக்கள் என பல ரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கறுப்பு பட்டியணிந்து தமது எதிர்ப் பினை வெளிக்காட்டியுள்ளனா்.