Breaking News

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு.!

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வர வுள்ள நிலையில், இன்று சபையின் கடைசி அமர்வு நடைபெறவுள்ளது. 

2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நட ந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலின் பின்னர், முதலாவது சபை அமர்வு 2013 ஒக்டோபர் 25ஆம் திகதி கூடியது. அதன் படி, சபையின் ஐந்து ஆண்டு பதவிக் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவ டையவுள்ளது.

இதன் பின்னர், அடுத்த தேர்தல் நடத்தப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வரை,ஆளுநரே வடக்கு மாகாணத்தை முகாமைத்துவம் செய் வார். அதேவேளை, வடக்கு மாகாண சபையின் முதலாவது சபையின் இறுதி அமர்வு இன்று கைதடியில் உள்ள பேரவை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த அமர்வு சம்பிரதாய ரீதியான விடைபெறும் அமர்வாக இருக்கும் என்றும், சபையில் தீர்மானங்கள் எதுவும் முன்வைக்கப்படாது எனவும், விவாதங்கள் நடத்தப்படாது என்றும் அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

சர்ச்சைகளின்றி இந்த அமர்வை மகிழ்ச்சியாக நடத்த ஒத்துழைக்குமாறும் அவர் உறுப்பினர்களிடம் கோரியுள்ளார். முதலாவது வடக்கு மாகாண சபை யின் இறுதி அமர்வு இன்று நடைபெறவுள்ளது.

அந்த வகையில் இன்றுடன் வடக்கு மாகாண சபை கலைகின்றது. அதன்படி முதலாவது வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வானது இன்று காலை 9 மணிக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகும்.

முதலாவது வடக்கு மாகாண சபையின்134 ஆவது அமர்வானது இறுதி அமர் வாக சம்பிரதாயபூர்வமாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன. சபை யின் ஒழுங்குப் பத்திரத்திற்கு அமைவாக அவைத் தலைவரின் அறிவித்தலை தொடர்ந்து வட மாகாண கீதம் முன்மொழிவும் அதற்கான அங்கீகாரமும் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபையில் கடந்த 5 ஆண்டுகளாக செய்யப்பட்ட திட்டங்கள் தடைகள் தொடர்பாக விசேட உரையினை ஆற்றவுள்ளார். மாகாண சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து உறுப்பினர்களும் தமது இறுதி அமர்வில் 3 தொடக்கம் 5 நிமிடங்கள் தமது மாகாண சபையினால் மேற்கொள்ளப்பட்ட நன்மை தீமைகள் தொடர்பாக உரையாற்றவுள்ளார்கள்.

இன்றைய சம்பிரதாயபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் அடுத்த கட்ட நடவ டிக்கைகள் தொடர்பான அறிவிப்புக்களை விடுவிக்கலாம் என்ற எதிர்பார்ப் புக்கள் அரசியல் மட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை முதலாவது வடக்கு மாகாண சபையின் வடக்கு மாகாண சபை யின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கருத்துத் தெரிவிக்கையில், 2013ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் இன்று 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம்23 ஆம் திகதி வரை 134 வரை நடைபெற்ற அமர்வு களில் இரண்டு அமர்வுகளுக்கே நான் தலைமை தாங்கவில்லை. ஏனைய சபை அமர்வுக்கு நான் தலைமை தாங்கியுள்ளேன்.

இச் சபை அமர்வு காலத்தில் மாகாண சபை முழுமையாக செயற்படவில்லை என்றோ நிதி திரும்பிவிட்டது என்ற கருத்தை ஆரம்பம் தொட்டு மறுதலித்துத் தான் நான் வந்துள்ளேன். சில தீர்மானங்கள் முக்கியமானவை. மக்களுடைய கருத்துக்கள் வழங்கியுள்ளோம்.

அதேநேரம் இவை எல்லாமே செயற்பாட்டுக்குள் வந்துள்ளக என்று கூற முடி யாது. மக்களின் கருத்துக்கள் தேவைகள், உணர்வுகள், அபிலாசைகளை ஒவ் வொரு சந்தர்ப்பத்திலும் இச் சபை நிறைவேற்றியுள்ளது என்பது என்னுடைய கருத்தாகும் . மகாண சபை எதையும் சாதிக்கவில்லை என்ற யாரும் கூறினால் அது அவர்களின் தவறாகும்.

என்னுடைய செயற்பாடுகள் தொடர்பில் என்னுடைய கருத்துக்களை படிக் காமல் அவதானிக்காமல் கருத்துக்களை யாரும் கூறுவார்களாயின் அது அவர் களின் தவறு அதேநேரம் நாங்கள் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி விட்டொம் என்று சொல்வதற்கு நான் தயாராக இல்லை.

நான் எப்பொழுதுமே செய்யலாம் செய்யவில்லை செய்யவிடவில்லை என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளேன். இக் காலம் முடிந்த பின்னர் குறிப்பாக மாகாண சபை அமைந்த காலம் முதல் இன்று வரை யாரா வது எதையும் பேசினாலும்கூட மாகாண நிர்வாகத்தை தெரியாதவர்கள் அவைத் தலைவருடைய செயற்பாடுகள் தெரியாதவர்கள் என்னைப் பற்றி பேசியிருந்தால் அதைப்பற்றிக் கவலை இல்லை.

நான் நானாவே சுய கட்டுப்பாட்டை வைத்துக்கொண்டே செயற்பட்டுள்ளேன். அத் தடை இன்றுடன் நீங்கும் என்று நினைக்கிறேன் இனி அரசியல் ரீதியான கருத்துக்களை கூறுவதற்கு சுதந்திரம் கிடைக்கும் அதற்கான எத் தடையும் இல்லை என்றே நினைக்கின்றேன். தடை வந்தாலும் அதனையும் எதிர்கொள் வேன் எனத்தெரிவித்துள்ளாா்.