Breaking News

ஜெனீவா தீர்மானத்திலிருந்து அரசாங்கம் விலகவேண்டும்- சம்பிக்க ரணவக்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத் திலிருந்து விலகுவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்றையை அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளாா்.


இலங்கை அரசாங்கம் தான் இணை அணுசரணை வழங்கிய தீர்மானத்தி லிருந்து விலகுவதற்கான இராஜ தந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென அமைச்சர் தெரிவித் துள்ளார்.

தேசிய உண்மை ஆணைக்குழுவை ஏற்படுத்துவதற்கான சட்டமூலம் குறித்து அமைச்சரவை ஆராய்ந்த வேளையே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் நல்லாட்சி அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான பல நடவடிக் கைகளை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

எனினும் ஏனைய தரப்பிலிருந்து சாதகமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய அணுகுமுறை காரணமாக பிரிட்டன் உட்பட சில நாடுகள் விடுதலைப் புலிக ளிற்கு அனுதாபமான விதத்தில் செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளாா்.