Breaking News

ஜனநாயகத்துக்கு ஆதரவான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு.!

நாட்டில் ஜனாநாயகத்தை நிலை நிறுத்த பாராளுமன்றை அமர்வுகளை உடன டியாக கூட்ட வேண்டுமென ஒருமித்த கோரிக்கையுடனான ஐக்கிய தேசிய கட்சியின் பாரிய போராட்டம் நேற்று அலரி மாளிகைக்கு முன்னால் பிற்பகல் 12 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண, உள்ளூரா ட்சி அமைச்சர்கள் உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் என இப் போராட்டத்தில் குதித்துள்ளனா்.

அலரி மாளிகையின் முன்வாசல் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதாரவாளர்களி னால் முற்றாக நிரம்பிவழிந்ததோடு, அலரி மாளிகையின் உட்பகுதி, கொள்ளு பிட்டி வீதி, லிபட்டி சுற்றுவட்டாரம் உள்ளிட்ட கொள்ளுபிட்டி பகுதியே சனத் திரளால் மூழ்கியிருந்தது.

இப் போராட்டத்தின் பேரணி வீதி மறியலில் ஈடுபட்டு கொழும்பு மக்களின் தினசரி கடமைகளுக்கு இடையூறு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் கூடியிருந்தவர்களினால் எதுவித இடையூறுகளும் ஏற்படுத்தபடவில்லை என்பதோடு நாகரீகமான முறையிலேயே போராட்டம் நடைபெற்றுள்ளது. 

கொழும்பு நகரம் முழுவதும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் இருப்பதற்காக நேற்றைய தினம் காலை முதல் மாலை வரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப் பட்டிருந்தோடு, காலி முகத்திடல் முன்பாக இராணுவ, விசேட அதிரடி படை யினர், பொலிஸார், கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதனுடன் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக தண்ணீர் தாரை வாகனங்கள் பலவும் குவிக்கப்பட்டிருந்தது. கொழும்பின் பாதுகாப்பு நேற்றைய தினம் விசே டமாக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில் பலப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் கொழும்பு நகரின் அன்றாட பணிகளுக்கு எதுவித இடையூறும் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை. வீதி போக்குவரத்துக்கு இடையூறுகளுமின்றி வழமை போன்றே செயற்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

இவற்றையும் தாண்டி அலரி மாளிகை முன்பாக நேற்று நண்பகல் கூடிய சனத் திரள் தங்களில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே என கோஷமெழுப்பிய வாறு காணப்பட்டதோடு, பின்கதவினால் பிரதமராக திருட்டு கையொப்பமிட்ட மனித படுகொலைக்காரன், திருடன், நாட்டை சர்வதேசமளவில் அவமானத் திற்குற்படுத்திய மகிந்த ராஜபக்ஷவை ஆட்சி கதிரையிலிருந்து விரட்டியடிக் கவே நாம் இன்று ஒன்று கூடியுள்ளோம் எனவும் கோஷ மெழுப்பியுள்ளனா்.

யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டவர் என தம்மை கூறிக்கொண்டு மக்கள் தலை வனாக தம்மை அடையாளப்படுத்திக்கொள்ளும் போலிப் பிரதமர், தனது பலத்தை தற்போது நிரூபிக்க பயப்படுகின்றமை ஏன் எனவும் போராட்ட காரர்கள் கேள்வியெழுப்பினர்.

பச்சை நிறத்துக்கான போராட்டமல்ல இது எமது வாக்குகளை பெற்று ஜனாதி பதி ஆனவர் எம்மை கேளாமல் பிரதமரை மாற்றுவது எப்படி?

அவரது அந்த அதிகாரத்தை வழங்கியது யார்?

ஜனநாயகம் இது தானா?

மக்களின் வாக்குகளுக்கு துரோகம் விழைவித்த ஜனாதிபதியும் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவரே?

தேசத் துரோகிகளை ஆட்சி கதிரையிலிருந்து இறக்கிட வேண்டும். பாராளு மன்ற கூடி அரசியலமைப்பின் பிரகாரம் தீர்வு காணப்படாவிடின் பொது மக்கள் பாராளுமன்றை முற்றுகையிட்டு பாராளுமன்றை கைப்பற்றுவோம் எனவும் கோஷங்களின் நடுவே கேள்வி எழுப்பினர்.

இவர்களின் கோஷங்களுக்கு மத்தியில் பாராளுமன்ற உறுப்பினர்களான அகில விராஜ்காரியவசம், கபீர் ஹாசீம், வஜிர அபேவர்த்தன, சரத் பொன்சேகா, சந்திராணி பண்டார, சுஜீவ சேனசிங்க, பாலித்த தெவரபெரும, ஹரீன் பெர்னாந்து, ரஞ்சித் மத்தும பண்டார,சஜித் பிரேமதாச, ரவி கருணானயக்க, ஹிருனிக்கா பிரேமசந்திர, பாட்டாளி சம்பிக்க ரணவக்க, நளீன் திசாநாயக்க, கலாநிதி. விக்ரமபாகு கருணாதிலக்க உள்ளிட்டோர் மேடையேறினர்.

நண்பகல் 12 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்கள் மாலை 4 மணி வரையில் தொடர்ந்திருந்ததோடு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது விசேட உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளனா்.