Breaking News

முதலமைச்சருக்கு அருகில் பூனையை போன்று அமர்ந்தவா்கள் யார்?

இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதை தற்போதைய ஆட்சியாளர்களும், ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் மஹிந்த வாதிகளும் மறந்து செயற்படுவதாக சர்ச்சைக்குறிய அரசியல்வாதி என பெயர்பெற்ற முன்னாள்அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள் ளாா். 

இதனாலேயே சிங்கள பௌத்த மக்க ளின்உரிமைகளை பாதுகாத்துக் கொள்வதற்காக வீரதுட்டகை முனு என்ற பெயரில் அமைப்பொன்றையும் உருவாக்கி விரைவில் நேரடி அரசிய லிலும் குதிக்கத் திட்டமிட்டுள்ளதா கவும் அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளாா்.

சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சமூக நலன்கள் அமைச்சராக இருந்த சர்ச்சைக்குபெயர்போன அரசி யல்வாதியான மேர்வின் சில்வா, வீர துட்டகைமுனு என்ற புதிய அமைப் பொன்றை உருவாக்கியுள்ளார்.

சிங்கள பௌத்தர்களின் புனித பிரதேசங்களில் ஒன்றானஅனுராதபுரத்தில் வீர துட்டகைமுனு அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது. பௌத்த பிக்குகளின் ஆசீர்வாதத்துடன் தனது புதிய அமைப்பை ஆரம்பித்து வைத்த மேர்வின்சில்வா, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் தனித்து போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

(சிங்கள பௌத்தர்களுக்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வுள்ளேன். இந்த நாட்டின் சனத்தொகையில் 72 சதவீதமானர்கள் சிங்கள பௌத் தர்கள். இப்போது ஆட்சியில் உள்ளவர்கள் சிறுபான்மையினரின் பின்னால் செல்கின்றனர். விருந்துபசாரத்தில் கலந்து கொள்கின்றனர்.

யாழ்ப்பாணம் சென்று முதலமைச்சர் அருகில் பூனையைப் போல் அமர்ந்து இருக்கின்றனர்.இவர்களுக்கு சிங்களம் என்ற பெருமை இருப்பதாக தெரிய வில்லை.

மேர்வின் சில்வாவிடம் இருந்துதான் இவர்கள் சிங்களவருக்கு இருக்கும் பெருமையகற்றுக்கொள்ள வேண்டும். நாட்டில் பாரிய மாற்றங்களை நான் செய்வேன். அதனை இப்போதுகூற முடியாது. தருணம் வரும்போது அதனை கூறுகின்றேன்.

இன்று சிறிய ஒரு இடத்தில் உழுது நெல்லை பயிரிடும்நாள். இதற்கு வானம் சற்று ஒத்துழைக்கும் வரை பொறுத்திருங்கள் நான் வேலையை ஆரம்பித்து காட்டுகின்றேன்”.) சிறிலங்காவில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர் தலில் மஹிந்த அணியின் சார்பில் போட்டியிடுவார் என்று பெரிதாக எதிர் பார்க்கப்படும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை கரப்பான்பூச்சி என்று அடையாளப்படுத்திய மேர்வின் சில்வா, தனக்கு அவர் ஒருசவாலாக அமையப்போவதில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

 (“ஜனாதிபதி தேர்தலில்கோட்டாபய ராஜபக்ஷ எனக்கு சவால் இல்லை. ஒரு சவால் உள்ளது கரப்பான் பூச்சி கையில் சிக்கி நசுக்கப்பட்டால் அதனுடைய விஷம் காரணமாக தோளில் சிறய மாற்றம் ஏற்படும்.அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுப் போவதில்லை. எனினும் நான் கரப்பான் பூச்சிகளுக்கு பயம் இல்லை”.)

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலானதேசிய அர சாங்கத்தையும் கடுமையாக சாடிய மேர்வின் சில்வா, நாட்டின் சிறுபான்மை யினமான தமிழ் மக்களின் வாக்குகளுக்காக நல்லிணக்கம் என்று கூறிக் கொண்டு தமிழர் தரப்பின் இனவாத செயற்பாடுகளை தடுக்காது வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளாா்.

(ஸ்ரீலங்காவின் தற்போதைய ஆட்சியை பற்றி சொல்வதற்கு எதுவும் எஞ்ச வில்லை. நாட்டை தொடர்ந்தும் நாசமடைய செய்து வருகின்றனர். யாழ்ப்பா ணத்திலும் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பெயர் பலகைகளை மாற்றியுள்ளனர். இது தொடர்பில் யாராவது கதைத்தார் களா? அவ்வாறு கதைக்க மாட்டார்கள். சிங்கள பௌத்தர்களை ஏமாற்றாமல், சிங்கள கத்தோலிக்கர்களை ஏமாற்றாமல், இந்த நாடு சிங்கள பௌத்தர்களின் நாடு என்பதையும், சிங்களபௌத்தர்கள் வாழ்ந்து மடிந்த நாடு என்பதையும் ஆட்சியிலுள்ளவர்களும், ஆட்சியை பிடிக்க தருணம் பார்த்துக் கொண்டிருப்ப வர்களும் ஒருபோதும் கூறப் போவதில்லை.

இந்து மற்றும் முஸ்லிம் மக்களை ஏமாற்றாமல் இதனை இவர்கள்நேரடியாக தெரிவக்கப்போவதும் இல்லை”.) நாட்டில் ஊழல் மோசடிகளை முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டைகட்டியெழுப்புவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிபீடம் ஏறிய மைத்ரி – ரணில் அரசாங்கமும்மிகவும் மோசமான ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் மேர்வின் சில்வாகுற்றம்சாட்டினார்.

சிறிலங்காவின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்மோசடியாக கருதப்படும் மத்திய வங்கி பிணை முறி விற்பனை மோசடியை விட பல மடங்கு பெரியதான மோசடியொன்று வாகன இறக்குமதியில் நடை பெற்றுள் ளதாக கூறும் மேர்வின்சில்வா, இந்த மோசடியுடன் அமைச்சர்களுக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

( “இந்த நாட்டை கட்டியெழும்பிய வீர துட்டகைமுனு மன்னன்பெயரில் தான் நான் தேர்தலில் போட்டியிடவுள்ளேன். எனக்கு கட்சியொன்றும் உள்ளது. நேரம் வரும்போதுகட்சியின் பெயரை வெளியிடுவேன். எனினும் தற்போது, வீர துட்டகைமுனு என்ற பெயரில் அமைப்பொன்று உள்ளது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் – தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் இடையில் தொடர்பு உள்ளது. அதனால் தான் பிணை முறி மோசடி குறித்தவழக்கு இன்னமும் தாக்கல் செய்யப்படா துள்ளது.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கான வானங்களை இறக்குமதி செய்து இந்த அரசாங்கம் மத்திய வங்கிபிணைமுறி மோசடியைவிட பல மடங்குபெரிதான மோசடியொன்றில் ஈடுபட்டுள்ளது.

இவ் விடயம் உங்களுக்கு தெரியாதா? அடக் கடவுளே 2675 வாகனங்கள்சுங்கத் திணைக்களத்தால் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கதி லுள்ள ஒரு சில அமைச்சர்களுக்கும் இந்த மோசடியுடன் தொடர்பு உள்ளது.

அவர்களின் பெயரை சொல்லமாட்டேன், ஒருவர் அல்லதுஇருவருக்கு இதில் நேரடியாகதொடர்ப்பு உள்ளது. பிணைமுறி மேசடியை விட இந்த தொகை அதிகமாகும். இது தொடர்பில் விசாரணை எதுவும் இதுவரை முன்னெடுக் கப்படவில்லை.

நான் வீர துட்டுகைமுனுமன்னன் பிறந்த ஊரை சேர்ந்தவன். அவருடைய அம்மாவின் ஊரை சேர்ந்தவன். நாட்டின்இன்றைய நிலையை பார்க்கும் போது வீர துட்டுகைமுனு மன்னனின் பிறந்த ஊரை சேர்ந்தவன்என்ற ரீதியில் வெட்கமடைகின்றேன்.

அதனாலேயே நாட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்காக மக்கள் சேவகனாக மாற்றுவதற்கு திட்டமிட்டு எனது இந்த அரசியல் பயணத்தை ஆரம்பித்தி ருக்கின்றேன்”.) கொழும்பு அரசியலில் அண்மைய நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ள மைத்ரி – கோட்டா படுகொலை சதி தொடர்பிலும் மேர்வின் சில்வா கருத்துக்களை முன்வைத்தார்.

மைத்ரி – கோட்டா படுகொலை சதி என்பது மக்கள் செல்வாக்கை இழந்து தவிக்கும் சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன மற்றும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மக்களை ஏமாற்றி அவர்களின் அனுதாப அழையை திரட்டிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட நாடகம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றம் சுமத்தியுள்ளாா்.

(1962 ஆம் ஆண்டு சதித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இரண்டு மூன்று மணித்தியாலங்களில் சதித்திட்டத்துடன் தொடர்புடையவர்கள் கைதுசெய் யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர்.

எனினும் தற்போது பல வாரங்களாக இந்த விடயம்இழுத்தடிக்கப்படுகின்றது. இவர்கள்ஊடகங்களுக்கு தலைப்பு செய்திகளை வழங்குவதற்கே முற்படு கின்றனர்.

நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை பேசாமல் முன்னாள்பாதுகாப்பு செயலாளர கோட்டாபாய ராஜபக்சவை கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறு கின்றனர். கோட்டாபாயவை கொலை செய்து என்ன நடக்கபோகின்றது. ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய சதி என்று பேசுகின்றனர்.

ஜனாதிபதியை கொலை செய்து என்ன நடக்கபோகின்றது. விசவாமுடைய பாம்பை அல்லவா கொலை செய்வார்கள். அதனை விடுத்துசாரைபை் பாம்பை அல்லது பச்சோந்தி, அரணையை யாராவது கொலை செய்வார்களா, குறைந் தது தேளை அடித்துக்கொல்லலாம்.

சாரைப்பாம்பை ஏன் கொலை செய்யபோகிறார்கள். பச்சோந்தியை ஏன் கொலை செய்ய போகின்றார்கள். தவளையை ஏன் கொலைசெய் வேண்டும். பூனையை மீது ஏன் தடியடி பிரயோகம் மேற்கொள்ள வேண்டும்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக இவ்வாறான தகவல்களை வெளியிடும் இவர்களுக்கு முதுகெழும்பு இல்லை குற்றவாளிகளை கைது செய்வதற்கு. இது ஒன்று இவர்களின் பொய்யாக இருக்க்கூடும் இல்லாவிட்டால் தமது தவ றுகளை மறைப்பதற்காக ஒரு வதந்தியாக இருக்கலாம்.

அல்லது தம் மீதான மக்களின் அனுதாபத்தை பெறுவதற்கான வழிமுறையாக இருக்கலாம். சிங்கள மக்கள் உள்ளிட்ட ஏனையமக்களிடம் அனுதாபம் ஊடாக வாக்களை பெறமுடியாது. அனுதாப வாக்குகளை பெற்ற காலம் இப்போது இல்லை. தற்போது வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, தமது திறமையை காட்டவேண்டும். ஊழல் மோசடிகளில் ஈடுபட கூடாது”.)

- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -