Breaking News

"ஒருமித்த நாடு" சூத்திரத்தை மீண்டும் விரிவுபடுத்திய சுமந்திரன் (காணொளி)

உத்தேச புதிய அரசியல் யாப்பில் ஏக்கிய ராஜ்ய என்றும், ஒருமித்த நாடு எனத் தெரிவித்துள்ள பதங்கள் ஒற்றையாட்சியை குறிப்பிடுவன அல்ல என்று மீண் டும் தெரிவித்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளு மன்ற உறுப்பினர் மத்தியாபரனம் ஏப்ரஹாம் சுமந்திரன், புதிய அரசியல்யாப்பு சமஷ்டி கட்டமைப்பையே அடிப்படையாகக் கொண்டதெனத் தெரிவித்துள் ளாா். 

சிறிலங்காவின் அரசியல் யாப்புச் சபை மீண் டும் மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட் டுள்ள நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இத் தெளிவுபடுத்தலை யாழ்ப்பா ணத்தில் வைத்து மீண்டும் தெரிவித்துள் ளாா்.

யாழ்ப்பாணம் வடமராச்சி பிரதேசத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்று, வடக்கு மாகாண சபை உறுப்பினர் சுகிர்த்தன் தலைமையில் பருத்தித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவனபவன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்த இந்த நிகழ்வில் புதிய அரசியலமைப்புத் தொடர்பாக கூட்மைப்பின் பேச்சா ளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள் ளாா்.