Breaking News

மகிந்த ராஜபக்சே பிரதமரானார்! கொழும்பில் திடீர் திருப்பம்

மகிந்த ராஜபக்சே பிரதமரானார் கொழும்பில்
திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதுவரை மண்டபத்திலிருந்து முக்கியஸ்தர்கள் வெளியே வராத நிலையில் மேலதிக செய்திகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. மேலதிக விபரம் இணைக்கப்படும்.


ராணுவத்திற்கும், இலங்கை தமிழர்களுக்கும் இடையே நடந்த இறுதி கட்டப் போரில் இலங்கையின் அதிபராக இருத்தவர் மஹிந்த ராஜபக்சே. 2005 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் அதிபராக இருந்த அவர், 2015 ஆம் ஆண்டு பதவியில் இருந்து விலகினார்.

அவரைத் தொடர்ந்து, மைத்ரிபால சிறிசேனா இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றார். இதையடுத்து, இலங்கை இறுதிப்போரில் ராஜபக்சே புரிந்த போர்க் குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் கூறி வந்தனர்.

இந்நிலையில், இலங்கையில் ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ஆட்சியைக் கலைத்துள்ளது. இதையடுத்து, பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே பதவியில் இருந்து நீக்கப்பட்டு, இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சே பதவியேற்றுள்ளார். இலங்கை அதிபர் சிறிசேனாவின் முன்னிலையில் ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.