“தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லையா? தீக்குளித்து தற்கொலை செய்வேன்”
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளித்து தற் கொலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுமென வயோதிபப் பெண் ஒருவர் கண் ணீர் மல்கத் தெரிவித்துள்ளாா்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டு வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்தை நிறுத்து வதுடன், சிறை களிலுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடு தலை செய்ய வலியுறுத்தி நேற்று ஞாயிற்றுக்கிழமை பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு முன் பாக கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
பொன்னாலை மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான இப் போராட்டத்தில் பொன்னாலை மக்களில் ஒருவரான வே.தவமணி (வயது-70) என்ற பெண் மணியே கைதிகளுக்காகத் தீக்குளிப்பேன் எனத் தெரிவித்துள்ளாா்.
உண்ணா விரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு நலன்வேண்டி நேற்று பிற்பகல் 5 மணிக்கு பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்துள்ளாா்.
அதைத் தொடர்ந்து ஆலயத்திற்கு முன்பாக கவனீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பல்வேறு கோசங் களை எழுப்பியுள்ளனா்.
கைதிகள் விடுதலை செய்யப்படா விட்டால் தீக்குளித்து தனது உயிரை மாய்க்க வேண்டிய நிலை ஏற்படுமென இப்போராட்டத்தில் கலந்துகொண்ட வயோதிபப் பெண்ணொருவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளாா்.
இப்போராட்டத்தில் வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத் தலைவர் த.பாஸ்கரன், பொன்னாலை ஸ்ரீ கண்ணன் விளையாட்டுக் கழகத் தலைவர் செ.றதீஸ்வரன், விடுவிக்கப்பட்ட அரசியல் கைதி கோமகன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப் பித்துள்ளனா்.