Breaking News

மைத்ரி - ரணில் தலைமையிலான நல்லாட்சியிலும் உட்பூசல்கள் - அமைச்சர் மனோ (காணொளி)

சிறிலங்காவின் தற்போதைய மைத்திரி – ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் இருப்பதாக தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேஷன் ஒப்புக்கொண்டுள்ளார். 

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சியைப் போல் சர்வாதிகார ஆட்சியொன்று தற் போது இல்லை என்று கூறும் அமைச்சர் மனோ, ஜனநாயக ஆட்சியில் அரசாங் கத்தின் பங்காளிக் கட்சிக்குள் கருத்து முர ண்பாடுகள் மற்றும் வாதப் பிரதிவாதங்கள் ஏற்படுவது சகஜமெனத் தெரிவித்துள்ளாா்.

இதனையே அரசாங்கத்திற்குள் பிளவு என்று சிலர்பூதாகரமாக்கி பிரசாரம் செய்து வருவதாக கொழும்பை அண்மித்த புறகர் பிரதேசமான மொரட்டுவை யில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து உறையாற்றிய அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

இக் கலந்துரையாடலில் மேலும் கருத்துரைத்த அவர் அமைச்சர் மனோ கணேசன்... “போராடி நாங்கள் உருவாக்கிய அரசாங்கத்தில் முன்னைய அர சாங்கத்தின் அமைச்சர்கள் சிலரும் வந்து அமர்ந்துகொண்டார்கள்.

ஆனால் கடந்த அரசாங்கத்தை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கு போராட்டங்களை நடத்தியதால், தாக்குதல்களையும் கஷ்டங்களையும் நாமே எதிர்நோக்கினோம்.

இன்று அரசாங்கத்திற்குள் பிரச்சினைகள் முரண்பாடுகள் காணப்படுவதாக கதைகள் பரப்பப்படுகின்றன. அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் இருப்பது உண்மைதான். அதனை இல்லையென நான் கூறவில்லை.

காரணம் இதுவொரு ஜனநாயக அரசாங்கம். அமைச்சரவைக்குள் நாடாளு மன்றில் வாக்குவாதங்கள் இடம்பெறுவது உண்மையே. கடந்த அரசாங்கத்தை போல் இங்கு பூனைக்குட்டிகள் இல்லை.

எங்கள் அரசாங்கத்திற்குள் அரசன் இல்லை. அரச குடும்பம் இல்லை. ஒரு குடும்பம் எடுக்கும் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு செயற்படும் அரசாங்கம் ஒன்று இன்று இல்லை. அமைச்சர்களும் இல்லை. இந்த நல்லாட்சி அரசாங்கம் தொடரவேண்டும் 2020 இலும் தொடர வேண்டும்.

இது ஜனநாயக அரசாங்கம் என்பதால் பிரச்சினைகள் அதிகம். ஊடகங்கள் கேள்வி எழுப்புவதும் இல்லை. கடந்த ஆட்சியில் ஊடகவியலாளர்களின் முகங்களில் நாம் சிரிப்பினைக் காணவில்லை.

மத்திய கொழும்பில் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் முன்னிலையாகி ஊடகவியலாளர்களை துன்புறுத்தியது, தாக்கியது, விரட்டியடித்தது நானே என பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அமைச்சர்கள் கடந்த ஆட்சியில் இருந்தனர்.

எனினும் இந்த அரசாங்கம் அவ்வாறு தெரிவிக்காது, அவ்வாறு தெரிவிக்கவும் முடியாது. சத்தம் அதிகமாக இருப்பதால் பிரச்சினைகள் அதிகமென யாரும் நினைக்க வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளாா்.

 அதேபோல முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்றப்பட்டதும் பொதுத் தேர்தலொன்று நடத்தப்பட்டிருந்தால் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து பாராளுமன்றில் 120 க்கும் மேற்பட்ட ஆசனங் களை கைப்பற்றியிருக்கும் என்று தெரிவித்துள்ள மனோ கணேஷன், அந்த வாய்ப்பை ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த சிலரே தடுத்திருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

“ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி எதிர்க்கட்சியில் இருந்த போது தமக்கேயென தனியான ஒரு ஆட்சியினை அமைக்க முயற்சித்தது. எனினும் முடியாமல் போனது.

எனினும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்றதும் நாம் ஜனவரி 10 ஆம் திகதியே நாடாளுமன்றினை களைத்து தேர்தலுக்கு செல்வோம் எனத் தெரி வித்திருந்தோம். ஆனால் எம்மோடு உள்ள பண்டிதர்கள் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

அவர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்த்தே தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டது. அன்றே தேர்தல் நடாத்தப்பட்டு இருந்தால் எமக்கென ஆகக்குறைந்தது 120 உறுப்பினர்களையேனும் பெற்றிருக்கலாம்.

அதுவே நாங்கள் இழைத்த முதல் தவறு. அன்று அவ்வாறு தெரிவித்த பண்டி தர்கள் ஒருவர் கூட இன்று இல்லை. அனைவரும் ஓடி ஒழிந்து விட்ட னர். இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை குழப் பாது நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி மேலும் தொடர்ந்து செல்ல இடமளிக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டாலும் நாம் அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம்” என சூளுரைத்துள்ளாா்.



- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -