Breaking News

தென்பகுதியில் இளைஞர்கள் மனிதாபிமானமற்ற முறையில் கொலையான தகவல்.!

ஆர்ப்பாட்டங்கள் மூலம் தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் மக்கள் மீது குண்டுகளை பயன்படுத்தி நல்லாட்சி அரசாங்கம் அவர்களை விரட்டி அடிக்க வில்லையென தெரிவித்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, அவர்களுக்கான பாதுகாப்பையே வழங்கி வருவதாக தெரிவித்துள்ளாா்.

ஆளும் தேசிய அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் விமர்சிக்கும் ஊடகங்களுக்கும், அரச விளம் பரங்கள் வழங்குவதன் மூலம் மஹிந்த அர சாங்கத்தில் இருந்து தாம் வேறுபட்டு நிற்ப தாக அவர் சுட் டிக்காட்டியுள்ளார்.

மாத்தறை ராஹூல வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர அங்கிருந்த மாணவர்கள் முன்னிலையில் உறையாற்றினார்.

'எமது அரசாங்கம் கடந்த ஆண்டுகளாக எமது நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்லும் பயணத்தை பிரதான சில தூண்களின் கீழ் ஆரம்பித்தது. நாடு அபிவிருத்தியடைய வேண்டுமானால் நாட்டினுள் பிரதான தூண்களாக ஜன நாயகமும் நல்லிணக்கமும் காணப்பட வேண்டும்.

எமது நாட்டில் சுதந்திர ஜனநாயகமொன்று உருவாகும் என்பதனை எமக்கு அச்சமின்றி தெரிவிக்க முடியும். அனைவரினது சுதந்திரமும் இன்று எமது நாட்டில் நிலை நாட்டப்பட்டுள்ளது. நேற்றும் எனது நிதியமைச்சுக்கு முன்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றுள்ளது. 

எனினும் அதனை நாம் தடுக்க முயற்சிக்கவில்லை. ஜனநாயக நாட்டில் எதி ர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் என்பது ஒரு உரிமையாகும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் நாளாந்தம் எங்காவது எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடை பெறும்.

இவ்வாறு அங்குள்ள மக்கள் ஏதாவதொரு வழிமுறையின் கீழ் அவர்களது எண்ணங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றை நாம் துப்பாக்கி குண் டுகளால் அல்லது வேறு முறைகளினால் விரட்டியடிப்பதற்கு பதிலாக அவர்க ளுக்கான பாதுகாப்பினை வழங்கவே உள்ளோம்.

அது மாத்திரமன்றி இன்று ஜனாதிபதி பிரதமர் உள்ளிட்ட அனைவரையும் விமர்சிக்கும் வண்ணம் ஊடக சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஊட கங்கள் செயற்படுகின்ற நிலையில் நாம் எந்தவொரு எதிர்ப்பான நடவடிக்கை களையும் மேற்கொள்ளவில்லை.

சில ஊடகங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமரை தாக்குகின்ற நிலையில் அரச விளம்பரங்களை இன்றும் அந்த ஊடக நிறுவனங்களுக்கு வழங்குகின்றோம். இதுவே கடந்த மற்றும் நடைமுறையிலுள்ள அரசாங்கத்திற்கிடையிலான வித்தியாசமாகும்.'

இதேவேளை கொழும்பு மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த ஞாயிற்றுக்கிழமை மனித உரிமைகள் தொடர்பிலான விடயம் மேற் குலக நாடுகளிலிருந்து உதித்த விடயமென சர்ச்சைக்குரியதொரு கருத்தினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் மாத்தறை பௌத்த வித்தியாலத்தில் நடைபெற்ற என்டர் பிரைசஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் மங்கள சமரவீரவிடம், கர்தினாலின் கருத்து குறி த்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

'நான் அரசியலுக்கு வருகை தந்தது மனித உரிமைகளுக்காகவாகும். 1989 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருகை தந்ததன் பிரதான நோக்கம் மனித உரிமைகள் தொடர்பில் போராடுவதற்காகவே.

மனித உரிமைகள் மேற்குலக நாடுகளில் இருந்து வருகை தரும் விடயம் என்பதை யார் தெரிவித்தாலும் நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. ஸ்ரீலங் காவின் தென்பகுதியில் பெருந்திரலான அளவில் இளைஞர்கள் மனிதாபி மானமற்ற முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல வடக்கு இளைஞர்கள் மற்றும் எமது இராணுவத்தினரும் மனிதாபி மானமற்ற முறையில் ஒருவரையொருவர் கொலைசெய்துக் கொண்டனர். இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் அமைதியாக இருக்கவில்லை.

இவ்வாறான நிலையில் யாரேனும் மனித உரிமைகள் எமது நாட்டுக்கு அவசி யமற்றது என யாரேனும் தெரிவிப்பார்களாயின் அதற்கு நான் முற்றாக எதிர்ப் பினைத் தெரிவிப்பதாகத் தெரிவித்துள்ளாா். 

- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு -