Breaking News

“சிறுவர் மன ஓவியங்கள்” சித்திரக் கண்காட்சி கொழும்பு இலங்கை மன்றத்தில்.!

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “சிறுவர் மன ஓவியங்கள்” சித்திரக் கண்காட்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமை யில் நேற்று பிற்பகல் கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்றுள்ளது. 

கலைகளினூடாக சிறுவர்களின் மன தினை ஆற்றுப்படுத்தும் நோக்குடன் Art of Life சிறுவர் ஓவியப் பயிற்சி மன்றத்தினால் இந்த சித்திரக் கண் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது டன், 03 முதல் 12 வயது வரையிலான சிறுவர்கள் கலந்து சிறப்பித்துள்ளனா்.

கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி சிறுவர், சிறுமியர்கள் மிகுந்த அன்புடன் வரவேற்ற னர். சிறுவர் மன ஓவியங்கள் நினைவு மலர் இதன்போது ஜனாதிபதி அவர்களி டம் கையளிக்கப்பட்டதுடன், விசேட திறமைகளை வெளிக்காட்டிய சிறார்க ளுக்கு ஜனாதிபதி பரிசில்களை வழங்கி கௌரவித்துள்ளாா்.

நேற்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடிய திசினி சமந்தா லியனகே என்ற சிறுமிக்கு ஜனாதிபதி மரக்கன்று ஒன்றினை வழங்கியுள்ளாா்.

பிரபல ஓவியக் கலைஞர் திலக் கலுலியனகே உள்ளிட்ட Art of Life சிறுவர் ஓவி யப் பயிற்சி மன்றத்தின் சிறார்களால் வரையப்பட்ட ஜனாதிபதியின் உருவப் படமும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

பிரபல கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்ஹ, எட்வின் ஆரியதாச உள்ளிட்ட கலைஞர்களும் புத்திஜீவிகளும் அதிதிகள் பலரும் இந் நிகழ்வில் கலந்து சிறப் பித்துள்ளனா்.