சட்டபூர்வமான பிரதமா் ரணில் என்கிறது - பிரிட்டன்
சர்வதேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே இன்னமும் சட்டபூர்வமான பிரதமர் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கையில் வெளிவிவகார அமைச்சர் ஜெரமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையின் அர சியல் நிலவரத்தை ஆழ்ந்த கவலையு டன் அவதானித்து வருவதாகத் தெரி வித்துள்ளார்.
கொன்சவேர்ட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹியுகோ சுவையர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவிக்கையில்,..
பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் போது அவரது நடவடிக்கைகள் இலங் கையின் அரசமைப்பின் 19 வது திருத்தத்திற்கு முரணானது என்பதையும் சர்வ தேச சமூகம் ரணில் விக்கிரமசிங்கவையே சட்டபூர்வமான பிரதமராக கருது கின்றது என்பதையும் சுட்டிக்காட்டுவரா என ஹியுகோ சுவையர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசாங்கத்தை மாற்றுவதை வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்றத்திலேயே முன்னெடுக்கவேண்டும்,அதற்காக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும்போது இக் கருத்துக் களை வலியுறுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி சிறிசேனவுடன் பேசும்போது நான் நிச்சயமாக இந்த விடயங்களை சுட்டிக்காட்டுவேன் என தெரிவித்துள்ள ஜெரமி ஹன்ட் பெரு மளவானவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு குறித்து கவலைய டைந்துள்ளீர்கள் என்பது எனக்கு தெரியுமெனத் தெரிவித்துள்ளாா்.