Breaking News

தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு கொட்டும் மழையில் கிளிநொச்சியில் போராட்டம்.!

கிளிநொச்சியில் மலையகத்தோட்டத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக கொட்டும் மழையிலும் இரண்டு மனி நேரம் கவன யீர்ப்புப் போரட்டம் நடைபெற்றுள்ளது. 


இலங்கை ஜனாதிபதிக்கான மகஜர் ஒன்று மாவட்ட அரசாங்க ஊடாக கையளிக்கப்பட்டுள்ளது. அடிப்படைச் சம்பளம் ஆயிரம் ரூபாவாக இருக்க வேண்டுமென போராட்டத்தை முன்னெடுத்துள்ள தோட்டத் தொழி லாளர்களுக்கு ஆதர வளிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளி நொச்சி மாவட்ட காரியாலயத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை ஒன்பது முப்பது மணியளவில் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து இலங்கை ஜனாதிபதிக்கான மகஜர் மாவட்ட அரசாங்க அதிபர்எ ஊடாக கையளிக்கப்பட்டுள்ளது. நாகரிகம் வளர் ந்து விட்ட இந்த உலகிலே வெறும் தொழிலாளர்களாக முதலாளிகளுக்கு வெறும் இலாபத்தை ஈட்டி கொடுக்கிறவர்களாக இந்த நாட்டினுடைய பொரு ளாதாரத்தினுடைய முதுகெலும்பாக இருக்கின்ற எமது உறவுகளால் (தோட் டத் தொழிலாளர்களினால் நடாத்தப்படுகின்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பா.ம. உறுப் பினர் சிவஞானம் சிறிதரன் மாகான சபை உறுப்பினர்களான சு. பசுபதிப் பிள்ளை த. குருகுலராஜா கரைச்சி பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கிளிநொச்சி வாழ் மலையக உறவு கள் மத குருமார்கள் பொதுமக்கள் ஆதரவாளர்கள் எனப்பலரும் கலந்து சிறப் பித்துள்ளனா்.

குறித்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில நிமிடத்தில் இருந்து இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக மழை பொழிந்த போதும் தொடர்ந்தது இப்போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.