Breaking News

முன்னாள் போராளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கக் கூடாது - பொன்சேகா சூளுரை.!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் முன்னாள் போராளிகளுக்கு போரினால் பாதிக்கப்பட்டவர்களுக் கான இழப்பீட்டுத் தொகை வழங்கக் கூடாதெனத் தெரிவித்துள்ள சிறிலங் காவின் முன்னாள் இராணுவத் தளப தியான பிராந்திய அபிவிருத்தி மற் றும் வனஜீவராசிகள் அமைச்சர் சரத் பொன்சேகா அவ்வாறான திட்ட மொன்றை நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை யென சூளுரைத்துள்ளாா். 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டை பிரிப்பதற் காக சிறிலங்கா அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடியதால் அவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை” என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளாா்.

ஐக்கிய தேசிய கட்சி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று நேற்றைய தினம் அக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடை பெற்றது.

அமைச்சர் சரத் பொன்சேகா, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையில், முன்னாள் போராளிகளை இணைத்துக்கொள்ளக்கூடாதெனத் தெரிவித்துள்ளாா்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தொடர்ந்து உறையாற்றிய அவர், “தமிழீழ விடு தலைப் புலிகள் அமைப்பு என்பது ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு நாட்டை இரண்டாக பிளவுப்படுத்த முயற்சித்த ஒரு குழுவாகும்.

அது அரசியலமைப்பிற்கு எதிராக செயற்பட்டது மாத்திரமன்றி தீவிரவாத அமைப்பாகும். இவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிய வர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டிய அவசியமில்லை.

எனினும் யுத்தத்தினால் பாதிப்பிற்குள்ளானவர்கள் இருப்பார்களாயினும் அவர் களுக்கு இழப்பீடு வழங்குவதில் தவறில்லை.” என்றார். அதேவேளை சிறி லங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவிற்கும் – தற் போதைய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவிற்கும் இடையில் கடந்த சில வாரங்களாக இரகசிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது மீண்டும் இரு தலைவர்களும் இணைந்து சுதந்திரக் கட்சி தலை மையிலான ஆட்சியொன்றை அமைப்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக தக வல்களும் வெளியாகியிருந்தன.

இம் முயற்சி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி, மஹிந்தவை பிரதமராக்க மேற்கொண்டுள்ள சதி என்று அமைச்சர் சரத் பொன்சேகா குற்றம்சாட்டினார். “தற்போது இடைக்கால அரசாங்கம் பற்றி அதிகம் பேசப்படுகிறது.

ஆனால், இதன் பின்னணியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை விரட்டி யடிக்கும் நோக்கமே காணப்படுகிறது. எனவே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க முற்படுகின்றவர்களுக்கே இடைக்கால அரசாங்கம் தேவைப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் ஒற்றுமையான ஒரு அரசாங்கம் அமைக் கப்பட்டதை மறந்துவிட்ட சிலர் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபட்டு வரு கின்றனர். அவ்வாறானவர்களே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரே ரணையை கொண்டு வந்தனர்.

எவ்வாறாயினும் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைச் செய்து நாடா ளுமன்றில் நாம் பலம் பொருந்தியவர்கள் என உறுதியானது. இந்த இடைக் கால அரசாங்கத்தின் பேச்சும் ரணில் விக்ரமசிங்கவை விரட்டியடிப்பதற்காக வேயாகும்.

ஆகையால் இடைக்கால அரசாங்கம் என்பது எமக்கு அவசியமில்லை. அதே போல மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன மஹிந்தவிற்கு எதிரான கட்சிகளாகும்.

அதன் காரணத்தால் நாடாளுமன்றில் எமக்கு பெரும்பாண்மையொன்று காணப்படுகின்றது. அத்தோடு இடைக்கால அரசாங்கமொன்றினைத் தோற்று விக்க இந்த அரசியல் கட்சிகள் ஒருபோதும் துணையளிக்காது என்பதையும் தெரவித்துக் கொள்கின்றேன்.” எனத் தெரிவித்துள்ளாா்.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தவறான பொருளாதாரக் கொள் கைகள் காரணமாக நாடு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவும், அவர் தலைமையிலான அணியினரும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தியுள்ளனா்.

அதேவேளை தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரச தலைவர் மைத்ரி பாலசிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சியினரும் இக் குற்றச் சாட்டையே முன்வைத்துள்ளனா்.

இக் குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கி யஸ்தர் சரத் பொன்சேகா, மஹிந்தவின் ஆட்சியில் எடுக்கப்படட பாரிய கடன் களை திருப்பி செலுத்த வேண்டியதாலேயே நாடு தொடர்ந்தும் நிதி நெருக் கடியை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளாா்.

“தற்போது நாட்டில் பெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற மாயை உருவாக்க ஒன்றிணைந்த எதிரணி முற்படுகிறது. அவர்களுக்கு பதில் கூற வேண்டிய அரசாங்க தரப்புக்கள் மௌனம் சாதித்து வருவதால் அந்த குற்றச் சாட்டுக்கள் உண்மையென கருதப்படுகின்றது.

யுத்தத்தினை நடாத்த பிரதான ஒரு நபராக முன்னின்று செயற்பட்ட காரணத் தால், நாம் யுத்தத்தினை கடன்களைப் பேற்றுக்கொண்டே முன்னெடுத்திருந் தோம். அப்போதைய அரசாங்கம் யுத்தம் செய்யத் தேவையான 95வீதமான ஆயுதங்களை சீனாவிடமிருந்து கடனுக்கே பெற்றுகொண்டது.

2012 ஆம் ஆண்டில் அந்த கடனை மீள செழுத்த ஆரம்பித்தோம். அந்த கடன் களின் பெரும் தொகையை 2020 ஆம் ஆண்டிலேயே மீளச் செலுத்த வேண்டும். அந்த கடன் சுமையும் நல்லாட்சி மீதே சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஆட்சியிலும் மக்களுக்கு வாழ்வாதாரச் செலவு அதிகரித்தே காணப்பட்டது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு எமது அரசாங்கத்தில் ஆரம் பமானது அல்ல. நாம் ஆட்சி பீடம் ஏறியதும் வாழ்க்கைச் செலவினை குறைக்க நடவடிக்கை எடுத்தோம்.

 உலக அரங்கியில் பொருட்களினதும், எரிபொருட்களினதும் விலைகள் சற்று அதிகரித்துள்ளதை காணக் கூடியதாகவுள்ளது. சிறிலங்காவில் நிர்மாணிக்கப் பட்ட மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகியன பாரிய கடனில் கட்டமைக்கப்பட்டவை.

எனினும் அதனில் கிடைக்கப்பெறும் இலாபம் மிகக் குறைவாகும். வெற்றிலை விற்பவர்கள் கூட அதனைவிட அதிக வருமானத்தை ஈட்டக் கூடிய நிலையுள் ளது. நாட்டை கடனுக்குள்ளாகி தூரநோக்கற்ற பொருளாதார திட்டத்தினால் நாடு பாரிய சிக்கலுக்குள்ளாகியிருந்தது.

இதனை சிறிது காலத்தினுள் சீர்திருத்த முடியாது. மக்களுக்கும் இந்த நிலை யுடன் போராடவேண்டிய தேவையுள்ளது.” எனத் தெரிவித்துள்ளாா்.

- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு-.