Breaking News

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தமிழ் பெண் கடத்தல்.!!

கிரான் கோரகள்ளிமடு வாழைச்சேனையில் வசிக்கும் 2 பிள்ளைகளின் தாயா கிய கோபாலகிருஷ்ண பிள்ளை “நந்தினி” (நந்தா) என்பவர் கடந்த 13/9/2018 அன்று காலை 6.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத் தில் வைத்து காணாமல் போய் உள்ளார்.

கட்டார் நாட்டில் 3 ஆண்டுகள் பணி புரிந்து கடந்த 13/9/2018 அன்று நாடு திரும்பியுள்ளார். இவர் இவ்வாறு ஊருக்கு வரும் செய்தியை தொலை பேசி மூலம் 2 தினங்களுக்கு முன் தன் கணவருக்கு அறிவித்து இருந்த நிலை யில் கடந்த 13/9/2018 பல எதிர்பார்ப்புக ளுடன் கணவன் விமான நிலையத்திற்குச் சென்று காத்து இருந்துள்ளாா்.

கிட்டத் தட்ட 3 ,4 மணித்தியாலயம் காத்திருந்தும் மனைவி வரவில்லை. பின் மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதில் வர கணவன் மனைவி வரவில்லையென எண்ணி வீடு திரும்பி உள்ளார்.

பலமுறை மனைவியின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய போது தொடர்பு கொள்ள முடியாமையின் காரணத்தால் மனைவி பணி புரிந்த வீட் டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி விசாரித்த போது அவர்கள் 13/9/2018 காலை 6.30க்கு விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று இலங்கைக்கு அனுப்பி வைத்ததாகத் தெரிவித்துள்ளாா்கள்.

பின் கணவருக்கு விமான சீட்டின் பிரதியும் அனுப்பி வைத்தனர். என்ன செய்வ தென்று தெரியாமல் கணவனும் இரண்டு பிள்ளைகளும் அழுது புலம்பி தவி த்து போனார்கள்.

உடனடியாக கணவன் அருகிலுள்ள பொலிஸ் நிலையமான வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்ட போது பொலிஸ் அதிகாரி கணவரை விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்குச் சென்று. புகார் அளிக்கு மாறு தெரிவித்துள்ளாா்.

கணவன் மீண்டும் 15/9/2018 அன்று கொழும்பு விமான நிலைய பொலிஸ் நிலை யத்திற்குச் சென்று தன் மனைவி தொடர்பாக நடந்த சம்பவத்தை தெரி வித்த போது அவர்கள் விமான நிலையத்திலுள்ள cctv camera வில் பரிசோதித்த போது தனது மனைவி 3 பைகளுடன் விமான நிலையத்தில் நின்றதும் சிறிது நேரத் தின் பின் ஒரு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட விடயம் தெரிவாகியுள் ளது.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்து அங்கிருந்து ஒரு புகார் மூலப்பிரதி ஒன்றை பெற்று வருமாறு விமான நிலைய பொலிஸ் அதிகாரி தெரிவித்ததையடுத்து கணவன் கொழும்பு முழுவது சுற்றித் திரிந்து வீடு திரும் பியுள்ளாா்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார் கணவர். அதன் பின் மிகவும் மன வேதனையோடு கணவனும் இரண்டு பிள்ளைகளும் தன் மனை வியை தேடித் திரிந்தும் இதுவரை கண்டறிய முடியவில்லை.

எனவே இவ் photo விலுள்ள பெண்ணைப் பற்றி தங்களுக்கு எதும் தகவல் அறிய வரும் பட்சத்தில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு உங் களை அன்பாக வேண்டி நிற்கும் கணவன் மற்றும் பிள்ளைகள். (0762940741 தொடர்பு கொள்ளவும்)