Breaking News

ஜெய்ஹிந்த் ரஜினியின் அறிக்கையும் ஒளிந்திருக்கும் அரசியலும்.

முன்னாள் முதல்வர்கள் கலைஞர், ஜெயா ஆகியோரின் மறைவுக்கு பிறகு தமி ழக அரசியல் களத்தில் ஓர் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை தங்க ளாலேயே இட்டு நிரப்பிட முடியுமென வரிசையாக அரசியல் களம் நோக்கி  நடிகர்கள்.

அவர்களில் நீண்ட நாட்களாக தாம் அரசியலுக்கு வரப்போவதாக தெரி வித்து வந்த ரஜினி இவ் வருடம் டிசம் பரில் கட்சி துவங்குவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், அப்போதும் முடியாதென தெரிவித்துள்ளாா். 

ஆனால், தனது ரசிகர் மன்றத்தினை மக்கள் மன்றமாக மாற்றி பூத் வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கையை நடத்துங்கள் என தனது மன்ற உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார். மன்றத்திற்கு தலைமைப் பொறுப்புகளையும் நியமித்துள்ளாா்.

அவர்களில் சிலர் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறி மன்றத்தை விட்டு நீக்கினார். அதே சமயம், நீண்ட நாட்களாக ரசிகர் மன்றத்திலிருந்த தங்க ளுக்கு பதவிகள் எதுவும் வழங்கப்படவில்லையே என்ற வருத்தத்திலும் இருந் தனர் சிலர்.

பொறுப்பு கிடைத்த சிலரோ அதனை தவறாக பயன்படுத்த, இந்த விவகாரத் தையெல்லாம் நீண்ட நாட்களாக கவனித்து வந்த ரஜினி இன்று ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அதில், " ரசிகர் மன்றத்தில் நீண்ட காலம் பொறுப்பில் இருப்ப தாலேயே மக்கள் மன்றத்தில் பதவி வழங்க முடியாது.

பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் யாரும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு வர வேண்டாம். குடும்பத்தை பராமரிக்காமல், மன்ற பணிகளுக்கு வருபவர்களை வரவேற்க மாட்டேன் " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையின் மூலம் தனக்கு தெரியாமல் மன்ற நடவடிக்கைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவர் தெளிவுபடுத்த முனைந்துள்ளதாக தெரிகி றது. அறிக்கையின் முடிவில் வாழ்க தமிழ் மக்கள்.. வாழ்க தமிழ் நாடு. ஜெய் ஹிந்த் என்ற வார்த்தைகள் எழுந்துள்ளன.

தொடர்ச்சியாக தமிழரல்லாத ரஜினி எங்களை ஆள நினைப்பதா என்பன போன்ற விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிற சூழலில் ரஜினி தனது அறிக்கையில் இவ்வாறான சொற்களை நடைபெற செய்துள்ளதிற்குள்ளும் அர சியல் ஒளிந்திருப்பதாக தெரிவித்துள்ளனா் அரசியல் நோக்கர்கள்.