பாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் தீர்மானம்.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக நாடாளுமன்றத்தை கூட் டுவதற்கு இணங்காது விடின் சபாநாயகர் கருஜெயசூரிய விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் பாரா ளுமன்றத்தை கூட்டுவதற்கு ஆயத்த மாகலாமெனத் தெரிவிக்கப்பட்டுள் ளது. இது குறித்த இறுதி முடிவை யெடுப்பதற்கு முன்னதாக இன்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.
பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடி தத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு நடை பெறவுள்ளது.
ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டுமெனத் தெரிவிப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை செவி சாய்க்க வேண்டுமென சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை களை மேற்கொண்ட பின்னரே இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பி வைத்துள்ளார்.