Breaking News

தமிழ் அரசியல் கைதிகளை விடுவியுங்கள் - யாழில் ஆர்ப்பாட்டம்.!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கு மாறு வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றுள் ளது. 

சமூக நீதிக்கான வெகுஐன அமைப் பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேரு ந்து நிலையத்தில் காலை 10 மணி முதல் 11 மணிவரை இப் போராட்டம் நடைபெற்றுள்ளது.

இதன் போது அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று, அனை த்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய், பயங்கர வாத தடைச் சட்டத்தை உடனே விலக்கு,

உண்ணா விரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிரைப் பறிக்காதே, நல் லாட்சி அரசே ஏமாற்றாதே, வாய்ப்பு பேச்சில் நல்லிணக்கம் வதைப்பது அரசி யல் கைதிகளையா,

நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு, நல்லாட்சி அரசே உயிர்களை கொல் லாதே உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோசங்களையும் எழுப்பியுள்ளனா்.

இப் போராட்டத்தில் அரசியல் கைதிகளின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து குரல் எழுப்பியுள்ளனா்.