அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் கவனம் செலுத்துவதாக - சட்டமா அதிபர்
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாதமை மற்றும் கால தாமதங்கள் குறித்து நான் உடனடியாக கவனம் செலுத்துகின்றேன் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
உண்ணா விரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் விடயம் குறித்து இன் னும் இரண்டு அல்லது மூன்று தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்கின் றேன்.
யுத்த காலகட்டத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் பலர் பொது மன்னிப்பின் அடிப்படை யில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் இப்போதும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் பாரிய குற்றங்களின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களை விடுதலை செய்வது கடினமான விடயம் எனவும் தெரிவித்துள்ளாா்.
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நேற்று அலரி மாளிகை யில் நடைபெற்ற சந்திப்பின்போதே சட்டமா அதிபர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் இச் சந்திப்பின்போது சுமந்திரன் எம்.பி.யிடம் இருந்த அரசியல் கைதிகளின் விபரங்களை பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.