தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்குமாறு - சம்பந்தன்
ஜே.வி.பி. கலவரங்களிலும், 1983 கலவரங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை பொது மன்னிப்பில் விடுவித்ததை போன்று தமிழ் அரசியல் கைதிகளை யும் உடனடியாக விடுவிக்குமாறு பிரதமர் - நீதி அமைச்சர் -சட்டமா அதிபர் ஆகியோருடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப் பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன் மற்றும் கூட்டமைப் பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனா்.
இச் சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவருடன் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி கைதிகளின் விடுதலை குறித்து தீர்மானம் எடுக்கவும் அரச தரப்பு, எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்குறுதி வழங் கியுள்ளது.