2025 இல் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவதாக - மங்கள சமரவீர
அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி நிலையினை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறு மதியை உயர்த்துவதுடன், 2025ஆம் ஆண்டளவில் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளாா்.
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபா வின் பெறுமதி வீழ்ச்சியடைவதனால் நாடு பாரிய பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளது என சில அரசி யல் வாதிகள் முன்னெடுத்துவரும் பிரசாரம் தொடர்பில் விளக்கமளிக் கும் வகையில் கொழும்பில் நேற்றைய புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித் துள்ளாா்.