நடுவானில் சம்பந்தனும் மைத்திரியும் கலந்துரையாட கிடைத்த சந்தர்ப்பம் !
உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அரசியல் தீர்வை
உள்ளடக்கிய புதிய அரசமைப்பின் அவசியம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அரச தலைவர் மைத்திரிபாலவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அநுராதபுரம் சிறைச்சாலையில் உணவு ஒறுப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் நிலைமை தொடர்பாக அரச தலைவருக்கு விளக்கமளித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனை த்து அரசியல் கைதிகளையும் விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலையில் கோமரங்கடவல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட யானைப் பாதுகாப்பு வேலி நேற்று திறக்கப்பட்டது. அந்த நிகழ்வில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனும் கலந்து சிறப்பித்துள்ளாா்.
நிகழ்வின் பின்னர் உலங்குவானூர்தியில் கொழும்பு திரும்புபோது இருவரும் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் அரச தலைவர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இக் கலந்துரையாடலில் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.
குற்றஞ் சாட்டப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும், இராணுவத்தினரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிப்பது தொடர்பாக அரசால் முன் வைக்கப்பட்ட யோசனை தொடர்பாக பேசப்பட்டதெனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களை நிவர்த்தி செய்யக் கூடிய அரமைப்புத் தீர்வுத் திட்டம் வரைவில் முன்வைக்கப்பட வேண்டுமென அரச தலைவரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.