உயிர் பிரிந்தாலும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடரும்: அரசியல் கைதிகள் உறுதி.!
அநுராதபுரம் சிறையில் கடந்த 12 நாட்களாக தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை மிக வும் மோசமடைந்துள்ளதாக அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமது உயிரை துறந்தேனும் முடி வொன்றை காண்பதென அரசியல் கைதி கள் உறுதியுடன் தொடர்ந்தும் போராட்ட த்தை முன்னெடுத்து வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள் ளாா். தமது விடுதலை விடயத்தில் காலம் தாழ்த்தப்படும் பட்சத்தில் சிகிச்சைகளுக் காக தற்போது பெற்றுக்கொள்ளும் மருந்துகளையும் நிறுத்திக்கொள்வதற்கும் தமிழ் அரசியல் கைதிகள் தயாராகியுள்ளதாகவும் நேற்றைய தினம்அவர்களை நேரில் சென்று பார்வையிட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளாா்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறைச் சாலையில் பல வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகள் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
அநுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளில் எட்டு பர் செப்டெம் பர் 14 ஆம் திகதி உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில் அவர்களில்நான்கு பேரின் உடல் நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து எஞ்சிய இரு அரசியல் கைதிகளும் இணைந்து கொண்டனர்.
தம்மை குறுங்கால புனர்வாழ்வுக்கு உட்படுத்தி விடுவிக்க வேண்டும் மற்றும் தமக்கு எதிரான வழக்குகளை துரிதப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தியே கடந்த 13 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டம் முன் னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அனுராதபுரம் சிறை ச்சாலைக்கு இன்று நேரில் சென்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பார்வையிட்டுள்ளார்.
இதனையடுத்து சிறைச்சாலைக்குவெளியில் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோச மடைந்து வருவதாக கவலை வெளியிட்டதுடன், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி தலைநகர் கொழும்பில்ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.
செல்வம் அடைக்கலநாதனுடன் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஆகியோரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனா்.
சிங்கள மக்களின் வாக்கு வங்கிகளை இலக்காக கொண்ட பெரும்பான்மை யின அரசாங்கம், தமிழ் மக்களின் கோரிக்கைகளை செவிமடுக்க மறுப்பதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் செ.மயூரன் குற்றம் சுமத்தி யுள்ளாா்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தமதியரசன் சுலக்சன், இராசதுரை திருவருள், சிவசுப்பிரமணியம் தில்லைராஜ், இராசாபல்லவன் தபோரூபன், இராசதுரை ஜெகன், சூரியகாந்தி ஜெயச்சந்திரன், கிளிநொச்சியைச் சேர்ந்த சிவப்பிரகாசம் சிவசீலன், வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல்நிமலன் ஆகிய 8 தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 13 நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர்.
இவர்களில் ஆர்.தவரூபன், எஸ்.ஜெயசந்திரன், எஸ்.தில்லைராஜ் மற்றும் டி.நிமலன் ஆகியோர் உடல்நலன் பாதிக்கப்பட்டு அநுராதபுரம் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு தமிழ் அரசியல் கைதிகள் இப் போராட்டத்தில் செப்டம்பர் 25 ஆம் திகதியான நேற்றைய தினம் இணைந்துள்ளாா்.
ஏற்கனவே உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் தில்லைராஜ் என்ற அரசியல் கைதி வெலிக்கடை சிறைச்சாலை வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர் மீண்டும்அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.