காட்டுக்குள் சென்றவர் கண்ட அவலம்! மக்கள் கதறல்!
வவுனியா சேமமடு பகுதியில் இன்று வயோதிபர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் தெரியவருகையில்,
வவுனியா, புளியங்குளம் பகுதியில் வசித்து வந்த ஆரோக்கியநாதன் ஞானசீலன் 50 வயதுடைய வயோதி பர் சேமமடு படிவம் 2-இல் தனது சகோதரனின் விவசாயக் காணியில் கச்சான் பயிரிட்டு தோட்டம் செய்து வந்துள்ளார்.
இன்று காலை அப்பகுதியில் தனது மாட்டைத்தேடி காட்டுக்குச் சென்றபோதே காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலையிலிருந்து நீண்டநேரமாக காணவில்லை என்று தெரிவித்து உறவினர் கள் இன்று மாலை 3 மணியளவில் சேமமடுவில் தேடிச்சென்றபோது காட்டுப் பகுதி ஒன்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து ஓமந்தைப் பொலிஸார் மற்றும் கிராம அலுவலருக்குத் தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற ஓமந்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.