பிளவடையாத நாட்டின் தலைமைத்துவம் சிறப்பென்கிறாா் - சம்பந்தன்.!
பிளவடையாத நாட்டிற்குள் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங் களை பெற்று சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போது நாட்டில் காணப்படுவதாக தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.
அத்துடன் நாட்டில் வறிய மக்களுக் காக நடைமுறைப்படுத்தப்படும் இத் தகைய அபிவிருத்தி செயற்திட்ட த்தை அன்று நாட்டில் அவதானிக்க முடியாது போனது. இந் நிலயைில் தற்போது இடம்பெற்று வரும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு சகலரது ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் என்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட “சிறிசர பிவிசும” அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல திட்டங்கள் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.
இந் நிகழ்வில் அமரபுர சிரி சத்தம்வங்ஷ மகா நிக்காயவின் மகா நாயக்கர், அஹூங்கல அமரபுர மகா சங்க சபையின் உப தலைவர் வண. அஹூங்கல சிரிசீல விசுத்தி நாயக்க தேரர், திருகோணமலை ஜயசுமணராம விகாராதிபதி வண. திரிகுணாமலேயே ஞானகித்தி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உள்ளிட்ட பிரதேச மக் கள் பிரதிநிதிகளும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஏ. வீரசிங்க ஆகியோா் கலந்து சிறப்பித்துள்ளனா்.