Breaking News

சர்வாதிகாரியாக என்னால் செயற்பட முடியாது - சபாநாயகர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து தொடர் பில் சட்டமா அதிபர் விசேட விசாரணையொன்றை முன்னெடுத்துள்ளாா். 

ஆகையால் விசாரணை முடிவடை ந்து அறிக்கை எனக்கு கிடைத்ததும் நீதியை நிலை நாட்டுவேன் என சபா நயகர் கருஜயசூரிய சபையில் தெரி வித்துள்ளாா். 

மேலும் தெரிவிக்கையில், 

விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக நான் சட்ட மா அதிபரின் அவதானத்திற்கு கொண்டு வந்தேன். இந்நிலையில் இது குறித்து சட்ட மா அதிபரினால் விசேட விசாரணையொன்று முன்னெடுக் கப்பட்டு வருகின்றது. இவ் விடயத்தில் என்னால் சர்வாதிகாரியாக செயற்பட முடியாது. 

கட்சி தலைவர்களின் அனுமதியுடனே நான் எனது நடவடிக்கைகளை முன்னெ டுத்து வருகின்றேன். ஆகவே சட்ட அதிபரின் விசாரணை முடிவடைந்து அறிக்கை கிடைக்கபெற்றதும் நீதியை நிலைநாட்டுவேன் எனத் தெரிவித்துள் ளாா்.