Breaking News

சிறைச்சாலைகளில் தொலைபேசிகளை இனங்காணுவதற்கு விசேட உபகரணம்.!

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் இரகசியமாக வைத் திருக்கும் கையடக்கத் தொலைபேசிகளை இனங்கானுவதற்காக விசேட உப கரணங்களைப் பொருத்துவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீா்மானம் எடுத்துள்ளது. 

கைதிகள் கையடக்கத் தொலைபேசி களைப் பயன்படுத்தி பல வர்த்தக நட வடிக்கைகளை மேற்கொள்வதால் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷான் தனசிங்க தெரிவித்துள்ளாா்.

திட்டமிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் 30க்கும் அதிகமான குழுக்களை சேர்ந்த 170 – 200க்கும் இடைப்பட்டவர்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக் கப்பட்டுள்ளனர். இவர்கள் அதிகளவில் களுத்துறை, நீர்கொழும்பு மற்றும் பூசா ஆகிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக நிஷான் தனசிங்க மேலும் தெரிவித்துள்ளாா்.