பிரேரணை தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு
மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் குறிப் பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸுடனான கலந்துரை யாடலின் போது எதிர்க்கட்சித் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக தமிழ் தேசி யக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் இலங்கைக்கான ஐ.நா. வதி விடப் பிரதிநிதிக்கும் இடையில் நேற்று (03) பாராளுமன்றத்தில் சந்திப்பு இடம் பெற்றது.
மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமு லாக்கம் தொடர்பிலும் கலந்துரையாடிய இரா. சம்பந்தன், குறித்த பிரேரணை யில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான நடவ டிக்கைகள் இடம்பெறவில்லையெனத் தெரிவித்துள்ளாா்.
மக்களின் காணிகளை சுவீகரித்துள்ள இராணுவம், அங்கு பண்ணைகள் நடத்து வதை அனுமதிக்க முடியாது என்பதையும் இரா.சம்பந்தன் சுட்டிக் காட்டியுள் ளதாக அந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்வாதாரங்களை பாதிக்கும் இத்தகைய பொருளாதார நடவடி க்கைகளிலிருந்து இராணுவம் விலகியிருக்க வேண்டும் எனவும் ஐ.நா. வதி விடப் பிரதிநிதியிடம் எடுத்துக்கூறியுள்ளார்.
அத்துடன் தமிழ் இளைஞர்கள் தொடர்ந்தும் வேலைவாய்ப்பு போன்ற விடயங் களில் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்பிலும் டெரன்ஸ் டி ஜோன்ஸுக்கு தௌிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அரசாங்கமானது தீவிரவாதப் போக்காளர்களின் பேச்சுக்களுக்கு தேவையற்ற முக்கியத்துவத்தினை வழங்குகின்றமை, இனங்களுக்கு இடையேயான புரிந் துணர்வினை ஏற்படுத்துவதற்கு தடையாக அமைந்துள்ளதாகவும் தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புக்கூறல் விடயங்கள் தொடர்பில் ஐ.நா. வதிவிட பிரதிநிதியிடம் கரு த்து தெரிவித்த இரா.சம்பந்தன், பாரிய குற்றங்களை இழைத்த இராணுவத் தினர் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த கால சம்பவங்கள் மீள நிகழாமையை உறுதி செய்யும் வகையில், புதிய அரசியல் யாப்பு அங்கீகரிக்கப்படுவதன் அவசியத்தையும் தமிழ் தேசியக் கூட் டமைப்பு இதன்போது வலியுறுத்தியுள்ளது.
மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியுள்ள போதிலும், 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கம் தொடர் பில் அரசாங்கத்தின் மீதான சர்வதேசத்தின் ஈடுபாடு தொடர்ந்தும் மாற்ற மடையாமல் இருக்கும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட பிரிதிநிதி டெரன்ஸ் டி ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.