Breaking News

ஐவர் பலி; யாத்திரைக்கு தற்காலிக தடை விதிப்பு.!

இந்தியாவின் ஜம்முகஷ்மீரில் பெய்து வரும் அடைமழை காரணமாக அமர் நாத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்ட பக்தர்களுள் ஐவர் உயிரிழந்துள்ள னர். 

இதனால் அமர்நாத் பாதயாத்திரைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள் ளது. இமய மலை தொடரில் அமைந் துள்ள அமர்நாத் கோயிலில் யாத் திரை கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமானது இந் நிலையில் ஜம்புகஷ் மீரில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அமர்நாத்துக் கான பாத யாத்திரை மேற்கொண்ட பக்தர்களுள் ஐவர் உயிரிழந்ததுடன் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இந்திய யாத்திரியர்கள் பாதிப்படைந்துள்ளனர். 

அப் பகுதியில் நிலவும் அதிக மழை காரணமாக வெள்ளப் பெருக்குகளும் ஆங் காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனவே யாத்திரிகர்களின் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு அமர்நாத்துக்கான பாத யாத்திரை தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

இந் நிலையில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக நேபாள நாட்டு அரசாங்கத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.