முதுகெலும்புள்ள ஒருவர் தேவை என்கிறாா் - ஞான சார தேரர்!!!
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றவர் சர்வாதிகாரியா? ஜனநாயகவா தியா? என்பது பிரச்சினையில்லையென பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞான சார தேரர் தெரிவித்துள்ளாா்.
கண்டியில் போகம்பரை சிறைச்சா லைக்கு விஜயம் செய்த போது ஊடக ங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கை யிலேயே தேரர் ஜனாதிபதித் தேர்த லில் வேட்பாளர் யார்? என்பது தொட ர்பில் கூட்டு எதிர்க்கட்சியினர் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனா்.
எமக்கு தனிநபர்கள் யார் என்பது முக்கியமில்லை. எமது நாட்டை சரி யான திசைக்கு கொண்டு செல்ல முடியுமான, முதுகெலும்புள்ள ஒருவர் எமக்குத் தேவை. ஜனாதிபதியாக வருபவர், இந்த மண்ணைப் பற்றி அறிந்த, சூழலை விளங்கிய, மக்களின் மனங்களில் ஒருவராக இருத்தல் வேண் டும்.
சிலநேரம் இவ்வாறு வருபவர் சர்வாதிகாரியாக இருக்க முடியும். அது எமக்கு முக்கியம் இல்லை. எமக்குத் தேவையானது மக்களின் எதிர்பார்ப்பை மலரச் செய்யும் ஒருவரே என்பதாகும்" என தேரர் தெரிவித்துள்ளாா்.