யாழில் மயங்கி வீழ்ந்த மூவர் திடீா் மரணம்.!
யாழ்.மாவட்டத்தில் கொக்குவில், பலாலி மற்றும் சங்கானை ஆகிய பகுதி களைச் சேர்ந்த மூவர் திடீரென மயங்கி வீழ்ந்ததினால் உயிரிழந்துள்ளனர்.
கொக்குவில் கிழக்கை சேர்ந்த 60 வய துடைய கார்த்திகேசு கதிர் காமத்தம்பி என்பவர் வீட்டில் பாக்கு இடித்துக் கொண்டிருந்த வேளை திடீரென மய ங்கி வீழ்ந்துள்ளார். இந் நிலையில் உறவினர்கள் அவரை உடனே யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச் சைக்காக பயணிக்கையில் உயிரிழந் துள்ளாா்.
மேலும் பலாலியைச் சேர்ந்த 30 வயதுடைய குணசீலன் குயின்சன் என்பவர் வீட்டில் உணவருந்திக் கொண்டிருந்த சமயம் மயங்கி வீழ்ந்த நிலையில் உற வினர்கள் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாா். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.
மேலும் மன்னார் பெரிய தம்பம் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய இராமன் இராசதுரை என்பவர் சங்கானை பகுதியில் மயங்கி வீழ்ந்த நிலையில் சங் கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ள னா். இச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.