பிரதமர் நாளை வடக்கிற்கு விஜயமாகவுள்ளாா்.!
வடக்கிற்கு உத்தியோகபூர்வ விஜயமாகவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசின் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள புதிய நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்து வைப்பாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு கிளிநொச்சி இர ணைமடுச் சந்தியில் கம்பெரெலிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு செல் லும் பிரதமர் பிற்பகல் 3.30 மணிக்கு இந்திய அரசின் உதவியுடன் ஆரம்பிக் கப்படும் நோயாளர் காவு வண்டி சேவையினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந் நிகழ்வானது யாழ்பாணம் மாநகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ள துடன் அதில் பிரதமருடன் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா வடக்கு மாகாண முத லமைச்சர் சீ.விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இணையம் மூலமாக அங்கு உரையாற்றவுள் ளார். இந் நிகழ்வைத் தொடர்ந்து மாலை 6 மணியளவில் ரில்ஹோ விருந்தி னர் விடுதியில் தேசிய சுயதொழில் விருது நிகழ்வு நடைபெறவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நடைபெறும் தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ் வில் பிரதமர் கலந்து சிறப்பிக்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.