இந்திய சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்துக்கு பயணம்.!
இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், ஸ்ரீல ங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் பாராளு மன்றத்துக்கு பயணமாகியுள்ளாா்.
சபாநாயகர் பார்வையாளர் களரியில் அமர்ந்து சபை நிகழ்வுகளை பார்வை யிட்டதோடு, வந்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற் றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்க ளுடனும் கலந்துரையாடியுள்ளாா்.
அவருடன் இந்திய யூனியன் முஸ் லிம் லீக்கின் மாநில துணைச் செயலாளர், இப்ராஹிம் மக்கி, ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீத் ஆகியோரும் பயணமாகியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.