மஹிந்தவுக்கு விசேட சலுகை வழங்க முடியாது - அகிலவிராஜ்
பாராளுமன்றத்தில் ஏனைய உறுப்பினர்களுக்கு இருக்கின்ற கட்டுப்பாடுகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் உள்ளது.
ஆகவே 'நியூயோர்க் டைம்ஸ்' விவ காரம் தொடர்பில் அவர் விளக்கம ளிக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள் ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு மீண் டும் அழைத்து வந்தால் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிப்பேன் என மஹிந்த கூறுவதை ஏற்றுக் கொள்ள முடி யாது.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட் டுள்ள அனைத்து அதிகாரங்களும் இவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவருக் கென்று விசேட சலுகைகள் வழங்க முடியாது.
சீன துறைமுக கடன் தொடர்பில் நியூயோர்க் டைம்ஸ் செய்தியானது ஒரு தனிப்பட்ட விடயமாக மஹிந்த ராஜபக்ஷ கருத முடியாது இவ்விடயம் நாட் டின் அரச கடன்களுடன் தொடர்புபட்டதாக காணப்படுகின்றது. ஆகவே இது தொடர்பில் அவர் கட்டாயம் விளக்கமளிக்க வேண்டுமெனத் தெரிவித்துள் ளாா்.