"விஜயகலா பாராளுமன்ற உறுப்பினராக இருக்க முடியுமா?"- விமல் வீரவன்ச
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்ந்து பாராளு மன்ற உறுப்பினராக இருக்க முடியுமா? இது தொடர்பில் சபாநயாகர் எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சபையில் கேள்வியைத் தொடுத்துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந் துள்ளமையின் காரணமாக உணர்ச்சி வசப்பட்டு விஜயகலா மகேஸ்வரன் மீண்டும் புலிகள் வர வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். கருத்தினூடாகத் தான் அவர் அரசியலமைப்பினை மீறி யுள்ளமை தெட்டத் தெளிவாகியுள்ளது.
இவ்வாறான நிலையில் அவரலால் பாராளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து இருக்க முடியுமா? தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகள், சாதாரண மக்க ளின் இன்னல்களை பற்றி பேசினால் எமக்கு பிரச்சினை இல்லை.
என்றாலும் பயங்கரவாதத்தை உருவாக்க முனையும் கருத்தானது பெரும் தவாறாகும். ஆகவே இது தொடர்பில் சபாநாயகர் என்ற வகையில் உங்கள் நடவடிக்கை என்ன?