Breaking News

சங்கா அரசியலுக்கு வருவாரா?....

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககார அரசி யலுக்கு வருவாராக இருந்தால் முழுமையான ஆதரவு வழங்குவதாக அமைச் சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளாா்.

தேசிய அரசியலுக்கும் நாட்டின் எதிர் காலத்திற்கும் அவரே அவசியமென வும் வருவாராயின் அனைத்து வகை யிலும் ஆதரவு நல்குவதாகத் தெரி வித்துள்ளாா். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் அறிவிக்கும் ஊடகவிய லாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரை யாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளாா்.