Breaking News

தம்புள்ளை - பொஹொரன்வெவ வீதியில் வீசப்பட்ட பெண் சிசு!!!

தம்புள்ளை - பொஹொரன்வெவ, பிரதான வீதியில் பிறந்து ஒரு சில நாட்க ளுடைய பெண் சிசு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

வீதியில் பயணித்த வாகன சாரதியி னால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய இன்று காலை பெண் சிசு மீட்கப்பட்டு தம்புள்ளை வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையின் பின்னர் குழந்தை நலமாக இருப்பதாக தம்புள்ளை வைத்தியசாலை வட்டாரங்கள் உறு திப்படுத்தியுள்ளன.

மேலும் குறித்த குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்டதா? அல்லது பெற்றோ ரிடமிருந்து யாராவது கடத்தி வந்து வீதியில் விட்டுச் சென்றுள்ளனரா? என்ற கோணத்தில் பொலிஸார் தங்களது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.