கரும்புலிகள் தினத்திற்கு அரசாங்கம் தடை விதிக்கவில்லை!
கரும்புலிகள் தின அஞ்சலி நிகழ்வுக்கு அர சினால் தடை விதிக்கப்படவும் இல்லை அது தொடர்பான எந்தவித சுற்றறிக்கையும் அரசு வெளியிடவும் இல்லை என்கின்றார் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா.
கடந்த ஜூலை ஐந்தாம் நாள ன்று வடக்கு கிழக்கில் இடம்பெற்ற கரும் புலிகள் தின அனுட்டிப்பின் பின்னர் தெற்கில் சில சிங்கள இனவாதிகளால் பரப்பப்படும் இனவாத அறிக் கைகளுக்கு பதிலாக பல விமர்சனங்கள் வெளி யாகியுள்ளன.