Breaking News

நல்லாட்சியால் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக - லலித் பியும் பெரேரா

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற் பாட்டினால் இதுவரையில் 60 ஆயிரம் பேர் நேரடியாக அரசியல் பழிவாங்க லுக்குள்ளாக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 3 இலட்சத்து 50 பேர் மறைமுகமாக வும் பாதிக்கப்பட்டுள்ளதாக “நீதிக் கான குரல்” அமைப்பின் செயலாளர் லலித்பியும் பெரேரா தெரிவித்துள் ளார்.

நீதிக்கான குரல் அமைப்பு ஏற்படு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவி க்கையிலேயே மேலும் தெரிவித்துள்ளாா். 

நல்லாட்சி அரசாங்கத்தின் நடவ டிக்கை மூலம் 60 பேர் நேரடியான அரசியல் பழிவாங்கலுக்குட்டுள்ளதுடன் மறைமுகமாக 2 இலட்சத்து 50 ஆயிரம் முதல் 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்வாறு நேரடியான அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டவர்களில் 17 ஆயிரம் பேர் அரச சேவையாளர்களாவும், 3,500 பேர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர்க ளும் ஆவர். அது தவிர தனியார் துறை மற்றும் சுயதொழிலாளர்களும் அரசாங் கத்தின் பழிவாங்கல் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.