கருணாநிதி நலமாகவுள்ளார் - கனிமொழி.!
தி.மு.க. தலைவர் கருணாநிதி நன்றாக இருப்பதாகவும், தொண்டர்கள் அனை வரும் தைரியமாக இருக்க வேண்டுமெனவும் கனிமொழி தெரிவித்துள்ளாா்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தற் போது 94 வயது வயோதிபம் சார்ந்த உடல் உபாதைகள் காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி கோபால புரம் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந் தார் கருணாநிதி.
வீட்டிலேயே அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ஆம் திகதி நள் ளிரவில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து காவேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர மருத்துவ கண்காணிப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளார்.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவத் தொடங்க, காவேரி வைத்தியசாலையின் அருகில் ஏராளமான தொண்ட ர்கள் குவிந்தனர்.
நேற்று இரவு கருணாநிதியின் உடல்நிலையில் சற்று பின் னடைவு ஏற்பட்டதால் தொண்டர்களிடையே அதிர்ச்சியும் குழப்பமும் நிலவி யுள்ளது.
கொந்தளிப்பில் இருந்த தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் பொலிஸார் திணறியுள்ள இந்த நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி நன்றாக இருப்ப தாக கனிமொழி தெரிவித்துள்ளார். தொண்டர்கள் தைரியமாக இருக்க வேண்டு மென்பதற்காகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.