அரசாங்கம் மாறினாலும் எங்களின் கோரிக்கை மாறாது - சிவாஜிலிங்கம்
ஐ. நா. மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் வெளியிடப்பட்டவா்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பா கவே உள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பொங்கி எழுந் துள்ளாா்.
மேலும் தெரிவிக்கையில்....,
2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்த லில் வெற்றிவாகை சூடலாம் என்ற மமதையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபகஷ தமிழ் மக்களின் ஆதரவினை பெற ஜனநாயகம் பற்றி பேசுகின்றனர்.
ஐ. நா மனித உரிமை பேரவையின் முக்கிய போர் குற்றவாளிகளாக பெயர் குறி ப்பிடப்பட்டுள்ளவர்கள் ஜனநாயக கொள்கை தொடர்பில் பேசுவது வியப்பா கவே காணப்படுகின்றது.
கடந்த காலத்தில் நடைபெற்ற வன்கொடுமைகளை தமிழ் மக்களால் மறக்க முடியாது.
இன்றும் பல விடயங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலே பாதிக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனா்.
வடக்கு, கிழக்கு மாகா ணத்தில் தமிழ் மக்களின் உரிமைகனை பாதுகாக்கும் அரனாகவே தமிழ்த் தேசிய தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.
அரசாங்கத்திடம் போலியான அபிவிருத்திக்களை நாம் கோரி நிற்கவில்லை நிரந்தரமான உரிமைகளை மாத்திரமே கேட்டு நிற்கின்றோம். என்பதை தெற்கு அரசியல்வாதிகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
மறுபுறம் வடக்கு அரசியல்வாதிகள் தொடர்பில் விமர்சனங்களை தெரிவிக் கும் உரிமையும் இவர்களுக்கு கிடையாது ஏனெனில் நாங்கள் சுயநல அரசி யலை மேற்கொள்ளவில்லை.
வடக்கு மக்களின் அரசியல் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடக் கிற்கு தெற்கு அரசியல்வாதிகள் வந்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரையும், வடமாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அரசியல் செய்ய முற்படுகின்ற நகைப்புக்குரிய விடயமாகும்.
உண்மை என்ன என்ற விடயத்தை அறிய முடியாத மூடர்கள் அல்ல தமிழர் கள். அரசாங்கம் மாறினாலும் எங்களது கோரிக்கை என்றும் மாறாது என்றாா் சிவாஜிலிங்கம்.