போர்க்கப்பலை இலங்கைக்கு பரிசளிப்பதாக சீனா.!
இரு தரப்பு நீண்டகால இராணுவ உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்கு சீனா ஆர்வமாகச் செயற்படுவதுடன் உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் போர்க்கப்பல் ஒன்றை இலங்கைக்கு பரிசளிக்க உள்ளதாக சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சுஜியான்வெய் தெரிவித்துள்ளாா்.
சீன இராணுவத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பில் அமை ந்துள்ள சீன தூதரகம் விஷேட நிகழ்வொ ன்றை நேற்றைய தினம் ஏற்பாடு செய்துள் ளது.
பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தி யரட்ண பிரதம விருந்தினராக பங்கேற்ற இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளனா்.
இலங்கையின் முப்படைகளுக்கு சீனா தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கும். இலங்கையுடனான பரஸ்பரம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்த சீனா அரப்பணிப்புடன் செயற்படும்.
மேலும் இரு நாட்டு படைகளுக்கு இடையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவ தற்காக புதிய பட்டுப்பாதை திட்டத்தின் அபிவிருத்தியைப் பலப்படுத்து சீனா விருப்பமாகவும் எதிா்பாா்ப்பாகவும் அமைந்துள்ளதாக கேணல் சுஜியான்வெய் மேலும் தெரிவித்துள்ளாா்.