கோத்தாவுக்கோ சஜித்திற்கோ ஆட்சி கிடைத்தால் போராடுவோம் - அநுரகுமார
மக்கள் ஆட்சியை அமைப்பதற்காகவே மக்கள் போராட்டத்தையே நாமும் முன்னெடுத்துள்ளோம். இப்போது நடைபெறும் ஊழல் ஆட்சியை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு மக்கள் அனைவரிடமும் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளாா்.
கோத்தபாய ராஜபக்ஷவுக்கோ சஜித் பிரேமதாஸவிற்கோ கொடுத்துவிட்டு மீண்டும் மக்கள் நெருக்கடியை சந்திக்க வேண்டாமெனத் தெரிவித்துள் ளாா். மக்கள் விடுதலை முன்னணி யின் மக்கள் சந்திப்பு நேற்று முன்தினம் அநுராதபுரத்தில் நடைபெற்ற போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள் ளாா்.
மேலும் தெரிவிக்கையில்,
நாட்டு மக்கள் அனைவரதும் தேவைகள் சரியாக பூர்த்தியாகக் கூடிய வகையிலும், அனைத்து இன மக்களின் உரிமைகளும் பலப்படக் கூடிய வகையி லும் இந்த நாட்டின் ஆட்சி இடம்பெற வேண்டும். மக்களின் தேவையும் ஆட்சியாளரின் நோக்கமும் ஒன்றாக இருக்கக்கூடிய மக்கள் ஆட்சியாக மாற வேண்டும்.
பெரும்பாலான மக்களின் நோக்கம் என்னவாக உள்ளதோ அதுவே மக்கள் விடுதலை முன்னணியாக எமது நோக்கமாகவும் உள்ளது. மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும், மக்கள் நலன் காக்கப்பட வேண்டும், உரிமைகளும் சலுகைகளும் சரியாக சென்றடைய வேண்டும்.
நாட்டில் எந்த இனத்தவராக இருந்தாலும் அவர்களுக்கான உரிமைகள் கிடை க்க வேண்டும். நாட்டின் பொருளாதாரம் பலமடைய வேண்டும், வேலையி ல்லா பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்ற மக்களின் நோக்கங்களே எமக்கும் உள்ளன.
இது தான் மக்கள் ஆட்சியாகவும் அமைய முடியும்.
ஆனால் இன்று மக்கள் ஆட்சி இடம்பெறவில்லை. நாட்டில் இடம்பெறும் பாரிய ஊழல், களவுகள், போதைப்பொருள் கடத்தல்கள் அனைத்துமே அரச மாளிகைகளில் இடம்பெறுகின்றன. சாதாரண களவுகள் குறித்து நாம் பேசுகின்றோம்.
ஆனால் மிகப்பெரிய ஊழல் குற்றங்கள் அனைத்துமே அரச மாளிகைகளில் தான் இடம்பெறுகின்றன. இதுவே நாட்டை ஊழல்வாத நாடாக மாற்றியுள்ளது. மக்கள் நெருக்கடிகளை சந்திக்கவும், பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி காணவும் இதுவே காரணமாக அமைந்துள்ளது.
இந்த ஆட்சி மக்கள் ஆட்சி அல்ல. இது ஊழல் வாத ஆட்சியாகும், மக்கள் மீது வரிச்சுமைகளை சுமத்தி அதன் மூலமாக அரசாங்கம் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றது. அதற்காகவே இவர்கள் ஆட்சியிலும் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளாக இந்த ஊழல் ஆட்சியே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
ஆகவே இந்த ஆட்சி தன்மையை மாற்றியமைக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. இந்த மக்கள் ஆட்சியை மக்கள் விடுதலை முன்னணியை சார்ந்த அணியினால் மட்டுமே உருவாக்க முடியும்.
கோத்தபாய ராஜபக் ஷ ஆட்சிக்கு வந்தால் நல்லது என சிலர் தெரிவித்துள்ளனா்.
சஜித் பிரேமதாச வந்தால் சிறப்பென மேலும் சிலர் கூறுகின்றனர். இவர்களை ஆட்சிக்கு கொண்டுவந்து பார்த்தால் தெரியும். கடந்த 70 ஆண்டுகளாக இவர்களுக்கு ஆட்சியை கொடுத்ததன் விளைவுகளையே நாம் சந்தித்துக்கொண்டி ருக்கின்றோம்.
இப்போதும் இவர்களுக்கு தான் ஆட்சியை கொடுப்போம் என மக்கள் நினைத் தால் கோத்தபாய ராஜபக் ஷவுக்கோ அல்லது சஜித் பிரேமதாசவிற்கோ ஆட் சியை கொடுத்துப்பாருங்கள். ஆனால் ஆட்சியை கொடுத்துவிட்டு மீண்டும் போராடத் தயாராக வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.