கிளிநொச்சி - கல்மடு குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு.!
கிளிநொச்சி - கல்மடுக் குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு ள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியைச் சேர்ந்த 63 வயதான சுந்தரம் புலேந்திரன் என்ற நபர் தொழிலுக்குச் சென்ற போது காணாமல் போயுள்ளதாக தர்மபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள் ளனர்.
குறித்த நபர் இன்று அதிகாலை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளாா்கள்.