மாகாண சபைத் தோ்தலிற்கு அரசு காலம் தாழ்த்துவதாக - பிரசன்ன ரணதுங்க
முடிவடைந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அடைந்த தோல்வியின் காரணமாக மாகாண சபை தேர்தல்களையும் அரசாங்கம் திட்டமிட்டு காலம் கடத்துவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளாா்.
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர் பில் கூட்டு எதிர்கட்சியின் நிலைப்பா ட்டினை விவரிக்கையில் மேலும் விவரிக்கப்பட்டவை.
மாகாண சபைத் தேர்தலை எந்த முறையில் நடத்தினாலும் அதற்கு முகங்கொடுப்பதற்கு கூட்டு எதிர்க் கட்சி தயாராகி விட்டது. தற்போது மீண்டும் பழைய முறையிலேயே தேர் தலை நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ் வாரம் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. எனவே மீண்டும் அடுத்த வாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடல் ஆரம்பமாகவுள்ளது.
அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன. தேர்தலை காலம் தாழ்த்துவதற்காகவே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகின்றது.
தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை நாட்டிற்கு பொருத்தமற்ற அரசாங்கத் தின் பொருளாதாரக் கொள்கை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிராகவே அடுத்த மாதம் 5 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள் ளோம்.