இரண்டாவது போட்டியில் பதிலடி அடிக்குமா இலங்கை?
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை பகலிரவு ஆட்ட மாக (2.30) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாக வுள்ளது.
நடைபெற்று முடிந்த டெஸ்ட் போட் டித் தொடரை 2:0 என்ற கணக்கில் இல ங்கையிடம் இழந்த தென்னாபிரிக்க ஒருநாள் தொடரை கைப்பற்றும் மோகத்துடனும் பழி உணர்வுடனும் ஒரு நாள் தொடரை ஆரம்பித்தது.
இதன் பிரகாரம் கடந்த 29 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒரு நாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி டுமினி, டிகொக் மற்றும் டூப்பிளஸ்ஸி ஆகி யோரின் அசத்தலான துடுப்பாட்டத்தின் மூலமாகவும் ரபடா மற்றும் சம்ஸி ஆகியோரின் நுணுக்கமான பந்து வீச்சின் காரணமாகவும் இலங்கை அணியை தம்புள்ளை மைதானத்தில் மண்டியிட வைத்து, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந் நிலையில் நாளை ஆரம்பமாகவுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இலங்கை அணி பதிலடி கொடுத்து பழி தீர்க்குமா? அல்லது அடுத்த போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் அடி பணியுமா? என் பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மெத்தியூஸின் தலைமையில் நாளை களமிறங்கும் இலங்கை அணியில், அகில தனஞ்சய, தனஞ்சிய டிசில்வா, நிரோஷன் திக்வெல்ல, செஹன் ஜெய சூரிய, பிரபாத் ஜெயசூரிய, லஹிரு குமார, சுரங்க லக்மால், குசல் மெண்டீஸ், குசல் பெரேரா, திஸர பெரேர, கசூன் ராஜித, லக்ஷான் சந்தகன், சானக மற்றும் உபுல் தரங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனா்.
டூப்பிளஸ்ஸி தலைமையில் களமிறங்கும் தென்னாபிரிக்க அணி சார்பாக, ஹஸிம் அம்லா, ஜூனியர் தலா, டீகொக், ஜே.பி.டூமினி, ஹேண்டிரிக்ஸ், கிளேஸின், மஹாராஜ், மர்க்ரம், டேவிட் மில்லர், முல்டர், லுங்கி நிங்கிடி, ரபடா மற்றும் சம்ஸி ஆகியோர் பங்கேற்கவுள்ளனா்.