Breaking News

வடமராட்சியில் சட்டவிரோத செயல்கள் தொடா்வதாக - சிவாஜிலிங்கம்

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத தொழிலில் தொடா்ந்து நடைபெறு வதால் பாரிய பிரச்சனைகள் நிகழக் கூடிய நிலை காணப்படுவதாக மாகாண சபை உறுப் பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள் ளார். 

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட் டம் இணைத் தலைவர்களான முதலமைச்சர் விக்கினேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற் றும் விஐயகலா மகேஸ்வரன் ஆகியோரின் தலைமையில் மாவட்டச் செய லக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

வடமராட்சியில் நடைபெறும் சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் தொடர் பில் தெரிவிக்கப்பட்டது. அதாவது அங்கு இடம்பெறுகின்ற சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் குறித்து இதுவரையில் எந்த விதமான நடவடிக்கை களும் உரியமுறையில் மேற்கொள் ளப்படவில்லை என்றும் இதனால் நேற்று முன்தினம் படகு எரிக்கப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளாா்.

இப் பிரச்சனையை விரைவாகத் தீர்க்க வேண்டுமென்றும் வலிறுத்திய சிவாஜிலிங்கம் கலகம் வந்த பின்னர் ஊரடங்கு தேவையில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தார். இவ் விடயத்தில் தெற்கிலுள்ளவர்கள் தொடர்ந்தும் நடவ டிக்கைகளை  முன்னெடுக்கத் தாமதித்து வருவதாகவும் குற்றம் சுமத்தியுள் ளாா். 

ஆகவே இதற்கு விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்றார். இதற்குப் பதிலளித்த மருதங்கேணி பிரதேச செயலர் அனுமதியில் லாமல் தொடர்ந்தும் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவது குறித்து நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத் தீர்ப்பு விரைவில் வெளியாகு மெனவும் தெரிவித்துள்ளாா்.