வடமாகாண அமைச்சரவைக் கலந்துரையாடல்களை நிறுத்துமாறு எச்சரிக்கை.!
வட மாகாண அமைச்சரவை கலந்துரையாடல்களை நிறுத்துமாறு மாகாண பிரதம செயலாளருக்கு தெரிவித்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கூறுயதாவது,
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அமைச்சரவையிலு ள்ள சில அமைச்சர்களின் ஊழல் மோசடிகளை விசாரிப்பதற்கான குழுவொ ன்றை அவரே நியமித்ததாகவும் குறித்த விசாரணைக் குழுவினூடாக சில அமைச்சர்கள் குற்றமுடையவர்களாக இனம் காணப்பட்டுள்ளதாகவும், நீதி மன்றத்தின் உதவியை நாடிய டெனிஸ்வரன் அனைத்து குற்றச்சாட்டுக்கள் இருந்தும் விடுதலை ஆகியுள்ளாா்.
டெனிஸ்வரன் நீதிமன்றத்தை நாடியபோது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவிற்கமைய அவருக்கு அவரது பொறுப்புக்களைத் தொடர்ந் தும் முன்னெடுப்பதற்கான அதிகாரம் நிறைவேற்றப்பட்டது.
ஆளுநர் என்ற ரீதியில் நீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிற்கு செவிசாய்த்து கடிதம் மூலமாகவும் பதிவுத்தபால் மூலமாகவும் நேரடியாக அவரது கரங்க ளில் கையளித்தும் மின்னஞ்சல் மூலமாகவும் அனைத்து வழிகளிலும் கடிதத் தின் வாயிலாக நீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பினை கருத்திற்கொண்டு செயற் படுவதற்கான அறிவுறுத்தல்களை எனக்கு வழங்குமாறு தான் முதலமைச் சரிடம் கோரியதாகவும் எனினும், இதுவரை அதற்கான எந்தவித அறிவுறுத் தல்களும் என் வசம் முதலமைச்சரினால் வழங்கப்படவில்லை எனத் தெரி வித்துள்ளாா்.
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடை அமுலிலுள்ள இக் கால கட்டத்தில், இடைக்காலத் தடைக்கு அமைய ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படாத பட் சத்தில் அமைச்சரவைக் கூட்டங்களை நடாத்துவதைத் தவிர்க்குமாறு பிரதம செயலாளருக்கு தான் கடிதமொன்றின் ஊடாக தெரிவித்துள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளாா்.